Saturday 26 November 2011

பனை மரமும்-மனிதர்களும்!



பனை மரமே!

மழை இல்லாம-
கலங்கி நிக்குறதும் -
மழைதண்ணி -
ஓடுதுன்னு-
அடிசிகிட்டு  நிக்கிறதும் -
நாங்க!

யாரோ -
பெத்த புள்ளைங்க -
பெருநாளை -
பேரானந்தத்துடன்-
ஊஞ்சலாடி கொண்டாட -
சுமைகளை-
 தாங்கி கொள்வது -
நீங்க!

தொட மாட்டோம் -
தன் தலையில இருந்து -
விழுந்த முடியை!

உன் தலையிலிருந்து-
விழுந்த ஓலையால் -
பயனடையாத -
உண்டா-
ஏழைங்க!?

உச்சியில இருந்தா -
நொங்காகவும்-
மண்ணுல-
புதஞ்சா-
பனை கிழங்காகிராய்!

வாழ்வில்-
''உச்சத்தில் ''இருந்தா-
அலட்டி கொள்கிறோம்-
''கீழே ''வந்தா-
கலந்குறவங்க -
நாங்க !

மனிதர்கள்-
 சொல்கிறார்கள்-
பனை மர நிழலை -
நம்பாதே -என!

உன் நிழலில் இருந்து -
வெட்டி பேச்சு -
பேச முடியல
என்கிற -
ஆதங்கத்துல!

வீடுகள் உறுதியாக -
நீ!
தந்தாய்-
சட்டங்களை!

தன் தப்பை -
நியாய படுத்த -
எழுதிகொண்டான்-
சட்டங்களை!

நேரங்களை கடைபிடிக்க -
நீயே உதாரணம்-
காலையில -
இறக்குனா -
பதநீர் -
நேரம் தவறி-
மாலையில இறக்குனா -
''கள்ளு'' நீ!

முயற்சியே செய்யாமல் -
காலத்தை-
 குறை சொல்வான் --
மனிதனே!

அடி முதல் நுனி வரை-
உங்களிடம் எவ்வளவோ-
''பலன்கள்''!

உருப்படாத புள்ளைகளை-
''ஏண்டா''? பனை மரம் போல -
நிக்கிறே''-என திட்டுறவங்க -
நாங்க !


No comments:

Post a Comment