Wednesday 21 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(44)

வியாபார கூட்டம்-
கடந்திருந்தது-
மதீனாவை -
தாண்டி!

நாட்கள் கனிந்தது-
அக்கூட்டம்-
மதீனாவை நோக்கி-
வர வேண்டி!

நசுக்கப்பட்ட-
சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட-
முஸ்லிம்கள்!

வியாபார கூட்டத்தை-
தாக்கிட துணிந்தார்கள்!

முஸ்லிம்கள் -
எல்லையை  நோக்கி-
பயணித்தார்கள்!

வியாபார கூட்டத்தலைவர்-
அபு சுப்யான் -
அபாயத்தை அறிந்தார்!

ழம் ழம் என்பவரை-
மக்காவிற்கு-
தகவல் சொல்ல-
அனுப்பினார்!

அறிந்த -
மக்காவாசிகள்-
அதிர்ந்தார்கள்!

படைகளை-
திரட்டினார்கள்!

ஆனாலும்-
முஸ்லிம்கள் படையை-
வியாபார கூட்டம்-
கடந்து விட்டது!

இதை-
மக்கத்து படைகளும்-
அறிந்தது!

முஸ்லிம்களை-
அழிக்கனும் என்கிற-
குரோதம்!

போரிட துணிந்தது-
மனம்!

முஸ்லிம்கள்-
தன் இருப்பை-
தக்கவைத்துகொள்ள!

மார்கத்தை சார்ந்தவர்களை-
பாதுகாத்துக்கொள்ள !

ஆலோசனை கூட்டம்-
நடத்தப்பட்டது!

எதிர்ப்பதே-என
தீர்மானம்-
முன் மொழியப்பட்டது!

பத்ர்-எனும்
இடம்!

போரிட்ட இடம்!

முன்னூற்று பதினான்கு பேர்கள்-
முஸ்லிம்கள் படை !

ஆயிரம் பேர்கள்-
மக்காவின் படை!

சிறு கூட்டத்திற்கும்-
பெரும் கூட்டத்திற்கும்-
யுத்தம்!

இன்றும் -
சுமக்கிறது-
சரித்திரம்!

(தொடரும்....)





2 comments:

  1. மேலும் அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. கடந்த ஒரு மாத காலம் இணையப்பக்கம் வரவில்லை சகோதரரே.....
    அருமையானதொரு ஆக்கத்தினை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்..
    அத்தனையும் படித்துவிடுகிறேன்...

    ReplyDelete