Thursday, 14 February 2013

ஹபீப்-குர்சியத் (16)

இருந்தான்-
ஹபீப்-
தானுண்டு-
தன் வேலை-
உண்டென்று!

நல்லவிதமாக-
குடும்பம்-
நடத்திக்கொண்டு!

எப்போதாவது-
நான்-
அலைபேசி வழி-
பேச நினைப்பேன்!

நள்ளிரவில்-
அழைக்க-
நேர்வதால்-
தவிர்ப்பேன்!

தவிர்த்து-
தவிர்த்து-
மறப்பேன்!

அசையாதிருக்கும்-
பெரிய சிறிய-
முட்களை-
நகர்த்திடும்-
கடிகார-
ஓடும் முள்ளை-
போல!

பூமி நீரை-
எடுத்து வைத்துகொள்ளாமல்-
திருப்பி தரும்-
மேகத்தை -
போல!

நான்-
மறந்தாலும்-
மறக்காமல்-
"அழைப்பான்"-
அதுபோலவே!

எத்தனையோ பேர்கள்-
புரியாமல்-
பிரிந்தவர்கள்-
உண்டு!

பலர்-
புரிந்துகொண்டே-
பிரிந்து சென்றவர்கள்-
உண்டு!

பிரிந்தே இருந்தாலும்-
மறக்காமல்-
அழைத்து பேசுபவன்-
அவன்(ஹபீப்)-
என்றும்!

சில மாதங்கள்-
முன்பு!

ஹபீபிடம்-
இருந்து-
அழைப்பு!

சொன்னான்-
தங்கை(குர்சியத்)-
கருவுற்றிருப்பதாக!

இருந்தது-
அச்செய்தி -
இனிப்பாக!

மேலும்-
சொன்னான்-
சில மாதங்களில்-
சொந்த ஊருக்கு-
அனுப்புவதாக!

எப்போதும்-
அவன்-
எனக்கழைப்பான்!

அன்று-
நான்-
அவனுக்கழைத்தேன்!

சகோதரி-(குர்சியத்)
"தவறியதால்!"

அதனை-
நான்-
அறிந்ததினால்!

என்ன செய்ய!?

எப்படி இதை-
ஈடு செய்ய!?

(இனி........)

6 comments:

  1. முந்தைய பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. என்னங்க அதிர்ச்சியை கொடுத்து விட்டீர்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. aamaam sako!

      athanai thaan muthal thodaril ezhuthi irunthen...

      thodar anpirkku mikka nantri!

      Delete
  3. அருமையாக போகிறது...
    நீங்கள் முடித்ததும் வந்து படித்து முடிக்கிறேன்.

    (என் டாஷ்போர்டில் உங்கள் வலை வேறு வருவதில்லை.)
    தொடர்கிறேன் நண்பரே.

    ReplyDelete