Tuesday 5 February 2013

ஹபீப்-குர்சியத்(7)

வெட்டியாக-
அலைந்தோம்!

வெயிலோடு-
உறவாடினோம்!

புழுதியோடு-
புரண்டோம்!

காடுகரை!
கம்மாகரை!

கடற்கரை!
இவைகள்-
ஒதுக்கிடாத-
உறவின் முறை!

ஆலமர கிளைகள்!
ஊஞ்சல் ஆடிய-
விழுதுகள்!

கருவேல-
மரங்கள்!

"ஒட" மர-
நிழல்கள்!

நிழலாடுது-
அந்நாட்கள்!

"கல்லாதது!"
"இல்லாதது"!

சில சொந்தங்கள்-
உதாசினபடுத்தியது!

உழைக்க-
உந்தி தள்ளியது!

பணம் சேர்க்க-
வேகம்!

பிறந்த மண்ணை-
பிரியும் சோகம்!

புது-
இடங்கள்!

புது-
மனிதர்கள்!

புரட்டி அடித்த-
வேலைகள்!

சில மாதங்கள்-
உழைப்பது!

பல மாதங்கள்-
சொந்த ஊருக்கு வந்து -
சுற்றுவது!

வந்துவிட்டது-
பருவ வயசு!

பாழாய் போன-
மனசு!

(நினைவுகள் சுழலும்.....)

//ஒட மரம்- கருவேல மரங்கள்
போன்றே பெரிய அடர்த்தியான-
மரம்/////




6 comments:

  1. இன்றைய சூழலில் பல பேரின் மன நிலை இது தான்....மிக அழகாக சொல்லி இருக்கீங்க.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. தொடருங்கள் தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  3. தொடரட்டும் நினைவுகள்.....

    ReplyDelete