Thursday, 28 February 2013

சிந்தித்ததால் சிக்கியது...!!

சவப்பெட்டி ஊழலால-
நாடே நாறுச்சி!

பொடாவை கொண்டு-
வரமுடியாம-
பி.ஜே.பி தவிசிச்சி!

அப்போதுதான்-
நாடாளுமன்றம்-
தாக்கபட்டுச்சி!

வந்த தேர்தலில்-
ஆட்சியில் இருந்த-
கட்சி-
படுதோல்வி-
அடஞ்சிச்சி!

அதற்கு காரணம்-
அக்கட்சி-
குஜராத் கலவரம்னு-
சொல்லுச்சி!

அதன் பிறகு-
மோடியை-
 கொல்ல வந்ததாக-
இர்ஷத்ஜகான் மற்றும்-
சிலர் உடல் -சல்லடையாக்கபட்டுச்சி!

தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர்-
ஹேமந்த் கர்கரேயால்-
இவ்வுலகத்திற்கு-
 மிகப்பெரும் உண்மை-
வெளிவந்துச்சி!

தீவிரவாதிகள்-
பட்டியலில்-
பிரக்யா சிங்-
கர்னல் ஜெனரல் புரோகித்-என
பட்டியல் நீண்டுச்சி!

பிறகு-
மும்பை தாக்குதலில்-
கர்கரே உட்பட-
அவரது சகாக்கள்-
உயிர்கள் மடிந்துடுச்சி!

நானே உண்மையான-
பாரதீய ஜனதா என-
உமா பாரதி-
கட்சியை விட்டு-
பிரிந்துச்சி!

தன் தம்பியின்-
துப்பாக்கி-
பிரமோத்மகாஜன்-
உயிரை பறிச்சிச்சி!

பிறகே-
வாரணாசியில்-
பிற மத வழிபாட்டுதலத்தில்-
தாக்குதல்-
நடந்துச்சி !

கர்கரே மரணம்-
விசாரணை தேவை-என
நாடாளுமன்றத்தில்-
சப்தம் கேட்டுச்சி!

பிறகு-
அமுங்கிடுச்சி!

நாட்டில் -"பிரச்சனையின்போதெல்லாம்"-
குண்டுவேடிக்கிறதே-என
பிற கட்சிகளிடமும்-
கேள்வி எழும்புச்சி!

ஆனாலும்-
எந்த பிரயோஜனமும்-
இல்லாமல் போச்சி!

நாட்டின்-
அச்சுறுத்தல்-
"சாய"பயங்கரவாதம்-என
முன்னாள் உள்துறை-
சொன்னாங்க!

அப்புறம்-
அதே விசயத்தைதான்-
இந்நாள் உள்துறை-
சொன்னாங்க!

ஆனாலும்-
என்ன நடவடிக்கை-
எடுத்தாங்க!?

இருவரையுமே-
பணிய வச்சிட்டாங்க!

டிசம்பரில்-
தொகாடியா-
"பின் விளைவுகளை"-
சந்திக்கனும்னு-
பேசிட்டு போச்சி!

அப்சல் தூக்கு-
நாடெங்கும்-
போராட்டம்-
கிளம்புச்சி !

ஹெலிகாப்டரில்-
ஊழல் என-
லேசாக சப்தம்-
கேட்டுச்சி!

இந்த எல்லா சப்தத்தையும்-
ஹைதராபாத்-
"சப்தம்" அடக்கிடுச்சி!

எது எப்படியோ-
அரசியலுக்கு-
தொந்தரவு என்றால்!

எப்படியாவது-
திசை திருப்பபடுகிறதோ-
"வெடி"சப்தத்தால்..!



/// --நாடாளு மன்ற தாக்குதலை பற்றி அருந்ததிராய் எனும் எழுத்தாளர் மனித உரிமை ஆர்வலர் பத்துக்கும் மேற்பட்ட சந்தேகங்கள் எழுப்பினார் .
விடைதான் கிடைக்கவில்லை!

--இர்சத்ஜகான் தாக்கியது போலி தாக்குதல்(என்கௌண்டர்)என
சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடக்கிறது.

--ஹேமந்த்  கர்கரே கொல்லப்பட்ட விவகாரம் who killed karkare!? என்ற ஆங்கில புத்தகம் முன்னாள் காவல்துறை அதிகாரியால் வெளியிடப்பட்டது.
தமிழிலும் வெளிவந்துள்ளது.
பத்திரிக்கையில் அறிந்தது.
புத்தகம் கிடைக்கும் இடம்-

இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரிய மேடு ,சென்னை-600 003
போன் +91 44-256 10 969
செல் .99408 38051////




6 comments:

  1. நடப்பதையும்

    நடந்ததையும்

    சிந்தித்து சிந்தித்தே

    நமக்கும் நினைவுகள்

    கழிகின்றன நண்பரே..

    நடக்கும் நாடகங்களை

    பார்த்துக்கொண்டிருக்கும்

    பொம்மைகளாகவே நாம்...

    ReplyDelete
    Replies
    1. aamaam anne...!


      oru naal nichayam neethi nilaiperum sako..!

      mikka nantri !
      mahen sako...!

      Delete
  2. எப்படியோ நாசமாப் போச்சி...!

    ReplyDelete
  3. எப்படியாவது-
    திசை திருப்பபடுகிறதோ- அப்படியும் இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. sasi sako..!

      aamaam ...!

      mikka nantri...!

      Delete