Tuesday, 12 February 2013

ஹபீப்-குர்சியத் (14)

நான்-
ஊர் திரும்ப-
ஒன்னரை-
 நாளானது!

ஒரு நண்பரின்-
அலை பேசி-
அழைத்தது!

எடுத்து பேசிய-
அவரின் முகத்தில்-
அதிர்ச்சி கலந்தது!

எனக்கோ-
பதற்றமானது!

பேசியவர்-
சொன்னது!

"தள்ளு முள்ளு-
ஆரம்பித்தது!

அடி தடி-
ஆனது!

வீடும்-
தாக்கப்பட்டுள்ளது!

ஒரு நண்பன்-
கைது செய்யப்பட்டதாக!

மற்றவர்கள்-
தலைமறைவாக!

சொன்னார்-
இவ்வாறாக!

தாக்கப்பட்ட-
வீட்டுக்காரர்-
இருந்தார்-
ஹபீபின்-
நெருங்கிய உறவினராக!

அதுபயன்பட்டது-
குடும்ப விரிசல்-
உருவாக!

செல்லும்-
பேருந்தில்-
நெருக்கமான-
கூட்டம்!

என் மனதில்-
இறுக்கமான-
எண்ண ஓட்டம்!

சில மணித்துளிகள்-
கழிந்தது!

பேருந்து-
ஊர் வந்தடைந்தது!

முதல்-
முயற்சி!

"உள்ளே"-
போனவன்-
வெளியே-
வந்தாச்சி!

அடுத்ததா-
முயற்சி!

மற்றவர்களுக்கு-
"இந்தா இந்தா"-என
இழுத்தடிச்சி!

ஜாமீனும்-
கிடைச்சாச்சி!

ஒன்னு வாங்கினால்-
ஒன்று இலவசம்-
பொருட்களில் மட்டும்-
இல்லை-
போல!

வழக்குகளுக்கும்-
பொருந்தும் போல!

வழக்கானது!
வழக்கமானது!

(நினைவுகள் சுழலும்....)

2 comments:

  1. மூன்று நான்கு நாட்களாக ஊரில் இல்லை! இன்று வந்து அனைத்து பகுதிகளும் படித்தேன்! அருமை! தொடருங்கள்!

    ReplyDelete