36)
முத்தத்தால்
யுத்தம் செய்வதும்!
யுத்தத்தில்
முத்தமாவதும்!
கவிதையே !
--------------------
கவிதையே.!(37)
-----------------
எதை எதையோ மறப்பதற்காக
எதை எதையோ தொட்டுப் பார்த்திருக்கிறேன்!
ஆனால்
உன்னைத் தொட்டப் பிறகோ
என்னையே நான் மறக்கிறேன்!
"கவிதையே"!
-----------------------
கவிதையே.!(38)
----------------
எதைக் கண்டாலும்
அதில் நான் உன்னை காண்கிறேன்!
என்னைக் காண
நீ எதைப் பார்க்கிறாய் !?
"கவிதையே"!
-------------------------
கவிதையே.!(39)
----------------
உன்னால் மிதிப்பட்டிட
சருகாகிடத் துடிக்கும்
கிளையில் ஆடிக் கொண்டிருக்கும்
இலை நான்!
"கவிதையே"!
----------------------
கவிதையே.!(40)
-----------------
நீ
காதலுமில்லை!
காமமுமில்லை!
அவ்விரண்டையும் வெறுத்திடாத
வாலிபமே நீ!
"கவிதையே"!
--------------------------
அற்புதமான கவிதைகள்
ReplyDeleteஅளவில் சிறியவை ஆயினும்..
பெரிதாக சிந்திக்க வைத்துப் போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
எதைக் கண்டாலும்
ReplyDeleteஅதில் நான் உன்னை காண்கிறேன்!
உண்மை தானே.. அழகு! அழகு!
அன்புள்ள ‘ கவிதை ‘ சீனி அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (11.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஇது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/11.html