Tuesday, 11 June 2013

தேடலுடன்... தேனீ...!!(5)

தேவர் சமூகம்!
கதையோட-
களம்!

சமூகத்தில்-
இருந்ததாக-
சொல்லப்பட்ட-
பழக்கம்!

எனக்கோ-
நடந்திருக்குமா!?-என
தயக்கம்!

அப்பழக்கம்-
இஸ்லாமியர்களிடம்-
"இருந்த"-
"இருக்கும்"!

இனியும்-
தொடரக்கூடிய-
பழக்கம்!

அதுதான்-
விருத்தசேனம்!

"செய்கிறார்"-
கதையின்-
நாயகர்!

"செய்யப்பட்டவர்"-
கதாநாயகரின்-
பேரர்!

நம்பிக்கையில்லாமல்-
மீண்டும்-
படிக்கிறேன்-
முகப்புரையை!

"தலைப்பின்"-
காரணம்-
உணர்த்துது-
உண்மை-
என்பதனை!

எழுத்துக்குதான்-
எத்தனை-
வீரியம்!?

சில பத்து ஆண்டுகள்-
முன் நடந்ததை-
இன்று வரைக்கும்-
அறிந்ததே-
காலம்!

இது போன்ற-
வியப்புகள்தான்!

என்னையும்-
தொடர்ந்து-
எழுதவைப்பவைகள்!

முடியும் வரை-
நல்லவற்றை-
விதைத்துவிட்டு-
செல்வோம்!

ஒரு விதை-
முளைத்து-
 மரமாகி-
மனிதர்களுக்கு-
நிழல் தரும்!

அப்பலனை-
நிச்சயமாக-
இறைவனிடம்-
பெறுவோம்!

இனி-
கதைக்கு-
வருவோம்!

மண்ணோடு-
மன்றாடிய-
மக்கள்!

வந்தது-
மண்ணை விட்டே -
பிரிய -
வேண்டிய-
நிலைகள்!

திட்டமது-
மற்ற மாவட்டங்களுக்கு-
நல்லது!

வாழ்ந்திருந்த -
மக்களுக்கோ-
கண்ணீரை-
தந்தது!

அரசாங்கத்தின்-
அணைகட்டும்-
திட்டம்!

அணையால்-
மண்ணோடு இருந்த-
உறவை-
பிச்செறிந்ததால்-
வருத்தம்!

(தொடரும்...)

// விருத்தசேனம் விவகாரம் -புத்தகத்தின் பெயரை பிறகு சொல்கிறேன்.அதுவரை தயவுசெய்து பொறுக்கவும்.தொடரவும்:/






5 comments:

  1. ///ஒரு விதை முளைத்து மரமாகி மனிதர்களுக்கு நிழல்
    தரும்...///

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தொடருங்கள் தொடருங்கள்..........

    ReplyDelete
  3. வார்த்தைகள் நடனமாடுகின்றன உங்கள் கவிதையில்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. தொடர்கிறேன் நானும் ஒரு வித ஆவலோடு......

    ReplyDelete
  5. தொடர்கிறேன் ,மிக அருமை.

    ReplyDelete