Tuesday, 25 June 2013

தேடலுடன்....தேனீ...!! (19)

பிரசார புயல்-
கரையை-
கடந்தது!

பேச்சு-
புயலை-
கிளப்பியது!

சத்தியத்தை-
பறைசாற்றியது!

பொய்கள்-
பொருமியது!

மால்கம் எக்சின்-
நெஞ்சத்தில்-
லட்சிய சுடர்-
எரிந்தது!

அவரின்-
எண்ணங்களும்-
லட்சியத்திற்காகவே-
உழைத்தது!

சென்றார்-
"உண்மையை"-
உரக்க -
சொல்லிக்கொண்டே!

வந்தது-
ஆபத்தும்-
பின் தொடர்ந்துகொண்டே!

எதிர்ப்புகள்!

கொலை மிரட்டல்கள்!

வீட்டில்-
தீவைப்புகள்!

எதற்கும் -
அஞ்சவில்லை-
மால்கம் x அவர்கள்!

அவர்-
கூலிக்கு-
மாரடிக்கவில்லை!

சத்தியத்தை சொல்ல-
அவருக்கொன்றும்-
பயமில்லை!

ஒரு கூட்டத்திற்கு-
வருகிறார்!

கூட்டத்தினிடையே-
மனைவி மக்களை-
காண்கிறார்!

பேச-
தொடங்குகிறார்!

டுப்!
டுப்!-
துப்பாக்கி சப்தம்!

அடங்கியது-
மால்கம் x -எனும்
சகாப்தம்!

லட்சியவாதிகள்-
மண்ணில் -
புதைகிறார்கள்!

மக்கள்-
மனங்களில்-
துளிர் விடுகிறார்கள்!

தேசத்தை நேசிப்பது-
குற்றமென்றால்-
திரும்ப திரும்ப-
அக்குற்றத்தை -
செய்வேன்-
சுபாஷ் சந்திர போஸ் !-
சொன்னது!

இரு நூறு ஆண்டுகள் -
செம்மறி ஆடாக வாழ்வதை விட-
ஒரு நாள் புலியாக வாழ்வது மேல்-
திப்பு சுல்தான் சொன்னது!

கட்டிலுக்கடியில்-
பெருச்சாளியாக பதுங்குவதை விட-
புலியாக பாய்ந்து சாவது மேல்-
மால்கம் x  சொன்னது!

இவ்வீரர்கள்-
வீர வார்த்தைகள்-
சாமானியனையும்-
வீரம் கொள்ள செய்கிறது!

--------------முற்றும்----------

//மால்கம் x வரலாற்றுக்கு ஆதார புத்தகம்.
புத்தக பெயர்-மால்கம் x
ஆசிரியர்-குலாம் முஹம்மது.
பதிப்பகம் -இலக்கிய சோலை.

நான் படித்து எட்டு வருடங்கள் இருக்கலாம்.அதே பதிப்பகம் வெளியிடுகிறதா அல்லது வேறொரு பதிப்பகம் வெளியிடுகிறதா தெரியவில்லை.
அறிந்தவர்கள் பின்னூட்டம் இடுங்கள் .இணைத்து கொள்கிறேன்.//

4 comments:

  1. மக்கள் மனதில் என்றும் இருப்பார்கள்...

    ReplyDelete
  2. நல்லதோர் தொடர... சீனி வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பொய்கள்-
    பொருமியது!//

    நல்ல சொல்லாடல்....!

    நாட்டுக்காக வாழ்ந்த பல நல்லவர்களை நாம் இழந்துவிட்டோம் இல்லையா ?

    ReplyDelete
  4. நல்லதொரு மனிதரின் வரலாற்றை அறிந்துகொண்டேன்! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete