Sunday, 16 June 2013

தேடலுடன்....தேனீ...!! (10)

"வந்தவரில் -"
ஒருவர்-
விற்கபட்டார்!

வேலைக்கு-
அழைத்து போகவில்லை-
அவர்!

வேலைக்காக-
மட்டுமே-
வாங்கபட்டார்!

வேலைகளும்-
நன்றாகவே-
"வாங்கப்பட்டார்"!

நேரமெல்லாம்-
கிடையாது!

எண்ணும்போதெல்லாம்-
வேலையைத்தவிர-
வேறு கிடையாது!

திருமணமும்-
நடந்தது-
இல்லை -
இன்பவாழ்விற்காக!

எஜமானர்களுக்கு -
அடிமைகளின்-
இன விருத்திற்காக!

குழந்தையும்-
பிறந்தது!

கொடுமைகளும்-
நடந்தேறியது!

முழுக்க-
எழுதினால்!

கவிதை நீண்டிடும்-
நீளத்தால்!

வீட்டு வேலை!
தோட்ட வேலை!

இன்னதென்று-
வேறுபாடில்லை!

தவிர்க்க-
முடியவில்லை!

மேலும்-
பாலியல்-
தொல்லை!

ஆனால்-
அவர்-
சொல்லி வளர்த்தார்-
தன் பிள்ளையிடம்-
சில தன் மொழிகளை!

தன் முன்னோர்கள்-
பெயர்களை!

இப்பழக்கம்-
தலைமுறைகள்-
மாறினாலும்!

தொடர்-
பெயர்கள்-
சொல்லுவதாலும்!

நடந்தேறியது-
ஒரு அதிசயம்!

ஆம்-
அற்புதம்!

என்ன அது!?
இனி வரும் அது!

(தொடரும்...)





3 comments:

  1. சுருக்கமாக இருப்பினும்
    நறுக்கென சொல்லிப்போகும்
    தங்கள் கவிதைப் பாணி அருமை
    தொடர்ந்து வருகிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. அற்புதம் அறிய ஆவலுடன் அடுத்தபகுதியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete