Wednesday, 12 June 2013

தேடலுடன் ....தேனீ..!! (6) (800 வது கவிதை)

"வெளியேற"-
வேண்டி-
கட்டாயமானது!

ஜனங்களின்-
மனங்களோ-
கடும் வேதனைக்குள்ளானது!

உடம்போடு-
ஒட்டிய-
தூசியும்!

வாசத்தையும்-
நாற்றத்தையும்-
சுவாசித்த-
நாசியும்!

கண்ணை-
குளிர்வித்த-
விளைநிலமும்!

புறப்படுகையில்-
கேட்டது-
கூட்டத்திடையே-
விசும்பலும்!

எங்கே!?
எப்படி!?-
வாழ்வது!

கேள்விக்குள்-
சுருண்டது-
அம்மக்கள்-
வாழ்வானது!

அவர்களின்-
கண்ணீரோடு!

என் கண்களும்-
கண்ணீரோடு!

கதையின்-
கதாபாத்திரங்கள்!

கதை கதையாய்-
சொல்லியது-
காரணங்கள்!

இம்மக்களை போல-
எத்தனையோ-
மக்கள்-
இவ்வுலகிலே!

சொந்த மண்ணைவிட்டு-
விரட்டபட்டார்கள்-
தெருவினிலே!

காரணங்கள்-
பல!

பெயர்கள்-
வெவ்வேறாக-
பல!

ஆனாலும்-
அநியாயம் -
செய்கிறவர்களுக்கு-
தப்ப வழியே இல்ல!

தண்டனை-
கிடைக்க-
காலம்-
கடக்கலாம்!

காலமானபின்னாவது-
கிடைக்கலாம்!

வேறு என்ன சொல்லி-
மனதை-
 அமைதிபடுத்தலாம்...!!!??

(தொடரும்....)

// புத்தக பெயர்;கள்ளிக்காட்டு இதிகாசம்.
ஆசிரியர்;வைரமுத்து
விற்பனையாளர்கள்;
திருமகள் நிலையம், சென்னை.
தொலைபேசி;
+91-44-2434 2899
கிழக்கு பதிப்பகம்,சென்னை.
தொலைபேசி;
+91-44-42009601/03/04//






6 comments:

  1. அநியாயம் செய்கிறவர்களுக்கு வழியே இருக்கக் கூடாது... தொடருங்கள்...

    ReplyDelete
  2. நன்றாக சொன்னீர்கள். 800ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. 800 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சீனி ஐயா.

    ReplyDelete
  4. படிக்க நினைத்த ஒரு புத்தகம்! உங்கள் கவிதை வாயிலாக படிப்பது மகிழ்ச்சி! 800வது கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. தண்டனைகிடைக்க வேண்டும் என்பதே விரட்டப்பட்டவர்களின் வழியில் வந்த எனது பிரார்த்தனையும்! 800 கவிதைக்கு வாழ்த்துக்கள் சீனி!

    ReplyDelete
  6. 800-வது கவிதைக்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete