Monday, 17 June 2013

தேடலுடன்...தேனீ...!! (11)

பிடல் காஸ்ட்ரோ-
சொன்னது-
விதைத்தவன்-
உறங்கலாம்-
விதைகள்-
உறங்குவதில்லை!

ஆம்-
நீதிவான்கள்-
சாகலாம்!
நீதியின் -
தேடல்கள்-
முடிவதில்லை!

வம்சாவழி-
தோன்றல்களின்-
பெயர்களை-
சொன்னவர்-
நினைக்கவாய்ப்பில்லை!

ஆனால்-
"அதனாலேயே"-
வழி வந்தவரில்-
தேடலுக்கு-
வழிவகுக்காமலில்லை!

முயற்சிகள்!
ஆய்வுகள்!

தெரிந்தது-
முன்னோர்கள்-
பிறந்த இடங்கள்!

சில -
தலைமுறைகளுக்கு-
அப்பால்!

சென்றார்-
ஒருவர்-
தன் ஆவலின்பால்!

கிராமமக்களிடம்-
சொல்கிறார்-
"முண்டா"-
"கிண்டே"-என
சில பெயர்களை!

பார்கிறார்-
தெரியாதே-எனும்
சொல்லும்-
மக்களை!

மேலும்-
தேடுகிறார்!

வயது முதிர்ந்த-
நாட்டுபுற பாடல்-
கலைஞர்களை -
சந்திக்கிறார்!

நீண்ட-
யோசனை!

பின்னர்-
சொல்லபடுது-
முன்னோர்களின்-
வாழ்ந்த அடையாளம்தனை!

போனவர்-
மகிழ்ச்சி பெருக்கோடு!

போனவரை-
அறிந்ததும்-
அதிர்ச்சி-
என்னோடு!

கடத்தப்பட்ட-
நாடு-
ஆப்பிரிக்கா !

கடத்திய நாடு-
அமெரிக்கா!

(தொடரும்...)

//ஆங்கிலப்புத்தக பெயர்-ரூட்ஸ் (roots
எழுதியவர்;அலெக்ஸ் ஹெலி

தமிழில் பெயர்;வேர்கள்.
தமிழாக்கம் தந்தவர்;
அப்துல் ஹமீது.

கிடைக்கும் இடம்-
இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரியமேடு ,சென்னை-03
தொலைபேசி -+91 44-256 10 969
செல்;99408 38051//







3 comments:

  1. விதைத்தவன்-
    உறங்கலாம்-
    விதைகள்-
    உறங்குவதில்லை!//

    சத்தியமான வார்த்தை....!

    ReplyDelete
  2. அதிர்ச்சியோடு செல்கிறது... தொடருங்கள்...

    ReplyDelete
  3. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete