Friday, 7 June 2013

தேடலுடன்... தேனீ.....!! (1)

பூக்களை-
தேடும்-
தேனீ!

கிட்டத்தில்-
கிடைக்குமா!?-என
புறப்படுவதில்லை-
தேனீ!

ஆனாலும்-
தேடலில்-
சுகம்!

தேடல்-
மட்டுமே-
அதற்கு-
தவம்!

பாறைகளை-
கடக்கிறது!

வனாந்தரங்களை-
கடக்கிறது!

சலிப்படைந்தா-
நிற்கிறது!?

இல்லை-
தொய்வில்லாமல்-
பயணிக்கிறது!

தேனீகளுக்காக -
யாரும்-
பூந்தோட்டம்-
வைப்பதில்லை!

பூக்களிடையே-
தேனீயும்-
வித்தியாசம்-
பார்ப்பதில்லை!

அதன்போக்கு-
அடையவேண்டிய-
இலக்கு!

அதுவரை-
சுருங்குவதில்லை-
அதன் சிறகு!

எனக்கும்-
தேனீயை போல-
ஆசை-
தேடிட!

சிலவற்றையாவது-
அறிந்திட!

தேனீயின்-
உறவு-
பூக்கள்!

எனது-
உறவு-
புத்தகங்கள்!

(தொடரும்...)




7 comments:

  1. //எனக்கும்- தேனீயை போல- ஆசை- தேடிட!

    சிலவற்றையாவது- அறிந்திட!

    தேனீயின்- உறவு- பூக்கள்!

    எனது- உறவு- புத்தகங்கள்!//

    அழகான ஆக்கம். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். ;)))))

    ReplyDelete
  2. அடையவேண்டிய இலக்கு உட்பட பலவற்றை தேனீயிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்... தொடர வாழ்த்துக்கள் நண்பா... நன்றி...

    ReplyDelete
  3. இலக்கு மட்டுமே முக்கியம்...

    அழகுக் கவிதை...

    ReplyDelete
  4. அருமை! தொடர்ந்து தேன் அருந்த வருகிறேன்! நன்றி!

    ReplyDelete
  5. தேன் போல இனிமை கவிதை...!

    ReplyDelete
  6. அழகாக அருமையாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
  7. தேனீயிடம் இருந்து நீங்களும் கற்றுக் கொண்டு எங்களுக்கும் சொல்ல ஒரு கவிதைத் தொடர்..... தொடர்கிறேன்....

    ReplyDelete