Thursday, 21 March 2013

புரட்டினேன்-புரட்டபட்டேன்(2)

அறியமுடிந்தது -
எப்படியெல்லாம்-
சேர முடிகிறது-
எழுத்திற்கு!?

எழுதி வைப்பதால்-
ஒரு நாள் சேரும்-
இவ்வையகத்திற்கு!

நடிகைகளின்-
"நடு ராத்திரிகள்"!

அரசியல்வாதிகளின்-
அசிங்க ராத்திரிகள்!

காவல்துறையின்-
காமகளியாட்டங்கள்!

இவைகளுக்குள்-
இணைப்பை ஏற்படுத்தியது-
சங்கரின் வேலைகள்!

சங்கர் மட்டும்-
கெட்டவராக!

மற்றவர்களெல்லாம்-
உத்தமர்களாக!

சங்கருக்கு-
தூக்கு கயிறு!

"உருவாக்கியவர்களுக்கு"-
நாட்டில் நல்ல பேரு!

மரங்கள்-
இலைகளை-
உதிர்க்கிறது!

மரங்களோ-
நிலைத்து நிற்கிறது!

அதுபோலதானோ-
"சிறு தலைகளை"-
"இறுக்குகிறது"!

"பெரும்தலைகள்"-
வெள்ளையும் -
சொள்ளையுமாக-
அலைகிறது!
------------முற்றும்-----/-----








1 comment:

  1. சூழ்நிலைகள் ஒருவனை கெட்டவனாக ஆக்குவதை அருமையாக கூறியுள்ளீர்கள்! நல்ல விமர்சனம்! நன்றி!

    ReplyDelete