Saturday, 16 March 2013

"கனவு தேவதை...!"


புன்னகைத்தாள்-
என்னை-
பார்த்துதான்!

புறப்பட்டு-
வந்தாள்-
என்னை-
நோக்கிதான்!

இன்னும்-
சிறு தூரம்தான்!

கரைந்தது-
தண்ணியில்-
விழுந்த-
பனிகட்டியாகதான்!

பனியில்-
குளித்தது-
பூந்தோட்டம்!

எனக்கு-
ஏனோ-
மன கலக்கம்!

"சட்-சட்"-
தட்டச்சு-
சப்தம்!

"படக்கு படக்கு-"
என்றது-
என் நெஞ்சம்!

என்னருகில்-
வந்துவிட்டாள்!

கூர்ந்து-
பார்த்தாள்!

பார்வையிலேயே-
" கூறு"  போட்டாள்!

வந்தது-
குற்றால-
அருவியை-
என் மேல்-
கொட்டிடவா!?

கொடைக்கானல்-
மலையிலிருந்து-
குப்புற தள்ளிடவா!?

கேட்டாள்-
ஏன் பேச-
தயக்கமா!?

இல்லை-
பயமா!?

பூவை தேடி-
வண்டுகள்-
செல்வதுண்டு!

இங்கு-
பூ ஒன்று-
"கரு வண்டு" என்னிடம்-
கேள்வி கேட்கிறது-
எதிரே நின்று கொண்டு!

எவ்வளவோ-
பேச எண்ணங்கள்!

எவ்வார்த்தை-
முதலில் பிரசவிக்க-
அவைகளுக்குள்ளே-
முட்டல்கள்!

சின்னதாய்-
சிரித்தாள்!

சிக்கலில்-
என்னை-
மாட்டினாள்!

திருவென-
முழிக்கும்-
என் தலையில்-
செல்லமாய்-
தட்டினாள்!

அடி-
தொடர்ந்தது!

பிறகு-
உரைத்தது!

தூக்கம்-
கலைந்தது!

நட்பின் கை-
என்னை-
அடித்து-
எழுப்பியது!

வேலைக்கு-
நேரம் ஆகிவிட்டதாக-
சுவர் கடிகாரம்-
தெரிவித்தது!

நிஜத்தில்தான்-
என்னுள்-
புதைந்தது-
எத்தனையோ-
வார்த்தைகள்!

கனவிலுமா-
சொல்லாமல்-
தவிக்கும்படி-
என் நிலைகள்....!?



4 comments:


  1. வணக்கம்!

    கனவில் வந்த தேவதையைக்
    கவியில் தந்தாய்! தமிழ்ச்சொற்கள்
    நினைவில் நிற்கும் வண்ணத்தில்
    நெய்த பூக்கள் மணம்வீசும்!
    மன..வில் பாயும் வேத்தை
    மகிழ்வில் தந்த கவிசீனு!
    உணா்வில் உயிரில் தமிழேந்தி
    உயா்ந்து வாழ்க பல்லாண்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. கனவிலுமா இந்த நிலை... சிரமம் தான்...

    ReplyDelete
  3. கனவுக் கவிதை கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. கனவில் வந்த தேவதை - நினைவிலும் வரட்டும்! :)))

    ReplyDelete