Tuesday 15 January 2013

கொட்டி கொண்டிருக்கிறது...!!

குடுவையிலிருந்து-
கொட்டும்-
தண்ணீர்-
அது!

வேடிக்கை!-
"கொள்ளளவும்-"
தெரியாது!

வடியாமல்-
இருக்க-
"அடைக்கவும்-"
முடியாது!


கொட்டும் தண்ணீரால்-
பயனா!?
வீணா!?

அது-
நடபட்டிருப்பதை-
பொறுத்தது!

நட்டு-
இருப்பது-
கள்ளி செடியா!?
மல்லி கொடியா!?

அது-
வரும் காலம்-
பதில் சொல்லகூடியது!

குடுவை-
நம் உடல்!

தண்ணீர்-
நம் ஆயுள்!

"கொட்டபடுவது"-
நம் செயல்!

நடபட்டிருப்பது-
பிறரது-
வாழ்வியல்!




8 comments:

  1. அருமையான கருத்து.
    நான் தொடக்கத்தில் சற்றுப் புரியாமல் தான் படித்தேன்.
    நீங்களே அழகாக விளக்கம் கொடுத்திருப்பது அருமை சீனி ஐயா.

    ReplyDelete
  2. நல்ல கருத்து. விளக்கம் தந்தது. சிறப்பு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. kavitha sako..!

      ungal muthal varavukku mikka nantri..!

      Delete
  3. நல்ல தத்துவம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நல்ல உதாரணம் வாழ்வியல் !

    ReplyDelete