Wednesday, 23 January 2013

ஆண்பிள்ளையா...!!?

காசுக்கு-
"சம்மதிப்பவள்"-
விபச்சாரியா!?

"காசு பெற்று-"
கல்யாணம்-
செய்பவன்-
ஆண்பிள்ளையா!?

இரண்டுக்கும்-
என்ன -
வித்தியாசமடா !?

காரி உமிழபடுது-
நம் -
ஆண்மையடா!

"கால்கட்டு"-
போடாதவர்கள்-
கைக்கூலி வாங்காமல்-
கல்யாணம்-
கட்டு!

"வாங்கி "-
"கட்டி இருந்தால்-"
திருப்பி கொடுத்திடு!

மாட்டேன் என்றால்-
மரியாதையை-
எதிர்பார்க்காமல்-
அடிமையாக-
இருந்திடு!

பாவப்பட்ட -
ஜென்மமல்ல-
பெண்மக்கள்!

"இவ்விசயத்தில்-"
இழிவடைந்தது-
ஆண்வர்க்கங்கள்..!!






8 comments:


  1. மாட்டேன் என்றால்-
    மரியாதையை-
    எதிர்பார்க்காமல்-
    அடிமையாக-
    இருந்திடு!//enna oru arumaiyaana variokaL.

    ReplyDelete
  2. நச்சென்று எச்சரிக்கும் கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. ஆண்பிள்ளைகள் என்றால்
    நிச்சயம் இக்கவிதை
    உரைக்கும்.

    அம்மாவைப் பேச
    விட்டுவிட்டு
    தனக்கொன்றும் தெரியாதது
    போல் நடிக்கும்
    ஆண்பிள்ளைகள்
    எல்லோருக்குமே
    அடிமைகள் தான்.

    அருமையான ஆழமான கவிதை.
    வாழ்த்துக்கள் சீனி ஐயா.

    ReplyDelete
  4. நல்ல கவிதை - நச்சென்று சொன்ன கவிதை!

    ReplyDelete