Saturday, 26 January 2013

விஷ-ரூபம்..! (2)

பெரியவட்டமோ-
சிறிய வட்டமோ-
ஒரு புள்ளியே-
தொடக்கம்!

கலையோ-
கதையோ-
கவிதையோ-
ஒரு "கரு"விலிருந்தே-
உருவாக்கம்!

விஸ்வரூபம்-
"கதையின் கரு"-
ஒரு விஷ வித்தாகும்!

அது-
சொல்லி செல்வது-
தொழுபவர்களும்-
குர் ஆன் ஓதுபவர்களும்-
கொலை செய்பவர்களாக-
காட்சிகள்-
அமைக்கபட்டுள்ளதாகும்!

மேலும்-
தகவல்-
தாலிபானில்-
தமிழக  முஸ்லிம்களும்-
பங்கேற்கும்-
காட்சிகளாகும்!

இதற்கு-
முன்னர்-
தாடிகளும்-
தொப்பிகளும்-
தீவிரவாதிகள்-
அடையாளங்களாகும்!

இப்படிதான்-
ஊடகங்கள்-
விதைத்த -
விஷங்களாகும்!

தென்காசியில்-
சங்க்பரிவார-
அலுவலகத்தில்-
குண்டு வெடித்தது!

அதன் அருகினிலே-
தொப்பிகள்-
கண்டெடுக்கப்பட்டது!

உண்மை தெரியவந்தது-
சங்க்பரிவாரர்களே-
செய்து விட்டு-
தொப்பியை -
போட்டு விட்டு-
சென்றது!

"துப்பாக்கி"-
சுட்ட ரணங்களே-
இன்னும் ஆறவில்லை!

இப்போது-
விஸ்வரூபமாக-
விஷப்பாம்பு-
படம் எடுத்து-
கொத்துவது-
நியாயமில்லை!

முருகதாஸ்-
காட்டினார்-
ஒரு சமூகத்தை-
ஸ்லீப்பர் செல்லாக!

ராணுவத்தில்-
ஒரு "செல்லை-"
"பொறுப்பில்"-
அமர்த்திட போவதாக!

அவர் எச்சமூகத்தை-
சொன்னதாக-
படம்பார்த்த-
அனைவருக்கும்-
தெரியும்!

உண்மை-
எத்தனை பேருக்கு-
தெரியும்!?

அந்த -
ஸ்லீப்பர் செல்-
கர்னல் புரோகித்-எனும்
சங்கபரிவாரன்-
என!

அதை கண்டறிந்த-
ஹேமந்த் கர்கரே-
கொல்லபட்டார் -
என!

உண்மைகளை-
ஏன் திரிக்கிறீர்கள்!?

இது-
கருத்துரிமை-என
பிதற்றுகிறீர்கள்!

படத்தை-
படமாக-
பார்க்கணுமாம்!

"மருத்துவர் "அய்யா-
சொல்றாராமாம்!

அய்யா-
அப்போ உங்க-
அன்பு மணி-
படங்களில்-
புகை பிடிக்கும்-
காட்சிகளை-
எதிர்த்தது-
ஏனய்யா!?

அது -
அன்றைக்கு-
படமா -
தெரியலையா!?

உங்களுக்கு-
அவசியம் என்றால்-
எதிர்ப்பீங்க!

மற்றவங்க-
நியாயமான -
கோரிக்கை என்றாலும்-
எதிர்பீங்க!?

(தொடரும்....)

//குறிப்பு- நேற்றைய கவிதைக்கு
பின்னூட்டம் இட்ட சகோ..!சுரேஷ் அவர்களின் ஆவலான கேள்விக்கான பதிலாகவே-
இத்தொடரை தொடர்கிறேன்.
சுரேஷ் சகோதரா !
உன்னை போலவே எத்தனையோ-
உறவுகள் இருப்பார்கள்.
உண்மையை அறிந்திட-
என்னை எழுதிட தூண்டிய உங்களுக்கு மிக்க நன்றி!//





3 comments:

  1. "துப்பாக்கி"-
    சுட்ட ரணங்களே-
    இன்னும் ஆறவில்லை...

    தோழரே உங்களது வேதனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக செய்யும் ஊடக பயங்கரவாதம் இது. தன்னை முற்போற்கு வாதியாக அடையாளப்படுத்திய கமலிடம் இருந்து இது வெளிப்பட்டு இருப்பதுதான் கவலைக்கூரியது.

    ReplyDelete
  2. விளக்க பதிவு கேட்டமைக்காக மெனக்கெட்டு பல தகவல்களை சேகரித்து அருமையான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி சீனு!

    ReplyDelete