Friday, 11 January 2013

என்ன செய்ய முடியும்......!!?

விவசாயி-
மண்ணுல இருந்து-
சோறு -
போடுறவங்க!

"ஆண்டவங்க"-
"ஆள்கிரவங்க"-
விவசாயிங்க-
சோத்துல-
மண்ணை அள்ளி-
போடுறாங்க!

விவசாயி-
முதுகெலும்பா-
தேசத்தை-
நிமிர்த்தியவங்க!

"வேசதாரிகள்"-
தேகத்தை -
காட்டி-
பொழைக்கிறாங்க!

பசியமர்த்தியவர்களை-
மறந்தோம்!

"வெறி"ஏற்றுபவர்களை-
"தலைவா"னு-
அழைக்கிறோம்!

வறண்டு-
பிளந்து-
கிடக்கும்-
விளை நிலங்கள்!

வறண்டது-
நிலமட்டுமா!?
அல்ல-
நம்ம-
மனங்கள்!

"கேவலமா-"
பேசியவர்களிடமும்-
கூட்டணி-
வைப்பாங்க!

அரசியல் -
சாணக்கியம்னு-
அதற்கு பேர்-
வைப்பாங்க!

இவங்க-
ஆட்சியை-
பிடிக்க-
சேர்ந்துப்பாங்க!

ஆனால்-
நதிகளை-
மட்டும்-
இணைக்கவே-
மாட்டாங்க!

ஆமாம்-
அவங்களும்-
பொழப்பு(அரசியல்)-
நடத்த-
வேணாமாங்க!?

ஆசை-
எனக்கில்லை-
தழைக்கனும்-
தமிழ் நாடென்றும்!

காயனும்-
கர்நாடகமென்றும்!

அற்ப ஆசைதான்-
"இருப்பதை"-
பகிர்ந்து கொண்டால்-
தேசம் வளம் பெறுமே-
என்று!

விதை கூட-
உப்புதண்ணிக்கு-
வளர்வதில்லை-
என்றுமே!

அப்படி வளருமேயானால்-
அம்மக்களின்-
வியர்வையும்-
கண்ணீரும்-
போதுமே!

நாம்-
விவசாயம்-
வாழ -
வழி செய்யவில்லையானால்!

கல்லையும்-
மண்ணையும்-
சாப்பிட பழகிகொள்வோம்-
வேற என்ன -
செய்ய முடியும்-
நம்மால்......!!!?



11 comments:

  1. மிக மிக சரியான சொன்னிங்க.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  2. கல்லையும்-
    மண்ணையும்-
    சாப்பிட பழகிகொள்வோம்-

    உண்மையை உணர்ந்து செயல்படுவோம்.

    ReplyDelete
    Replies
    1. sasi sako..!

      ungal varavukku mikka nantri!

      Delete
  3. கல்லையும் மண்ணையும் சாப்பிட பழகிக் கொள்வோம் - அந்த நாள் வெகுதொலைவில் இல்லை சீனி!.....

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. unamithaan anne...!


      varavukku mikka nantr sako..!

      Delete
  4. கல்லையும் மண்ணையும் சாப்பிட பழகிக் கொள்வோம் ..''//

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. நல்ல நெத்தியடி கவிதை! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. suresh sako..!

      mikka
      nantri sako...!

      ungalukkum vaazhthukkal...!

      Delete
  6. //அற்ப ஆசைதான்-
    "இருப்பதை"-
    பகிர்ந்து கொண்டால்-
    தேசம் வளம் பெறுமே-
    என்று!//

    ஒவ்வொருவரும் இப்படி அல்ப ஆசைப் பட்டால் நாடு செழிக்குமே!
    வாழ்த்துகள் சீனி!

    ReplyDelete