Tuesday, 12 July 2022

கண்ணாடி.!

 கவிதையென்பது

 ஒரு கண்ணாடி

அதை எட்டிப்பார்ப்பவர்கள் 

முகம்தான் அதில் பிரதிப்பளிக்கும்.!

பூ-முள்!



பூ நிலவு

முள் இருள்


பூ அழகு

முள் அதிகாரம்


பூ மென்மை

முள் வன்மை


பூ நீ

முள் நான்

கண்ணாமூச்சி..!

 எனது 

கண்ணாமூச்சி ஆட்டத்தில்

தொலைந்ததும்

தேடுவதும்

என்னைத்தான்.!

Saturday, 9 July 2022

ஞாபகங்கள்.!

 மனப்புத்தகத்தை 

தட்டும்பொதெல்லாம் தூசியாய் 

ஞாபகங்கள்.!

Thursday, 30 June 2022

சருகுகள்.!

 நதியிடம் 

தன்னை ஒப்படைத்துக் கொண்ட

சருகுகள் கிழிப்படுவதில்லை.!

Monday, 27 June 2022

பாதை.!

 பாதங்கள் எனதென்றாலும்

பாதை நீ காட்டியது.!

Wednesday, 1 June 2022

விரயம்.!

 பார்வைகள் பசியாரும்போது

வார்த்தைகள் 

வீண்விரயம்தான்.!