சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
வானவில்லை வளைத்தா
வளையல்கள் செய்தா(ய்).!?
துளையிட்ட குழலில்
நுழைந்திட்ட காற்று
இசையாவதுப் போலவேதான்
என்னுள் தங்கிய நினைவுகள்
கவிதைகளாகிறது.!
விரல்கள் தீண்டாதவரை
வீணைகள் மௌனம் கலைப்பதில்லை.!
பூக்களைத் தேடும்
தேனீயைப்போலவே
காயப்பட்ட இதயங்கள்
வார்த்தைகளைத் தேடும்.!
சொற்கள் மட்டும் இல்லாதிருந்தால்
என்னை நான் எங்கேப் போய்
ஊற்றி வைப்பேன்.!?
வாழ்வதென்பதென்ன
சொர்க்கப்பூஞ்சோலையா.!?
அமைதியாய் துயில் கொள்ள..!
மேகக்குளத்திற்குள்
யார் கல்லெரிந்தது..!?