Monday, 30 May 2011

அவமானம்!

என்னை -
அவமானம் படுத்த வேணாம் -
என்றது!

ஊழல் வாதிகள் மேல் -
வீசப்பட்ட-
'அழுகிய தக்காளி!'

Sunday, 22 May 2011

பார்த்"தாயே....!"


 தாயே!
நான் -
கருவறையில்-
 உதைத்தேன்-
கால்களால்!

இன்னும் நான்-
வதைக்கிறேன்-
வார்த்தைகளால் !

இரவு நேரங்களில் -
என்னை "சுற்ற "விட மாட்டாய் -
நான் கெட்டு  விடுவேன் -
என்று!

இன்னுமா!
நம்புகிறாய்-
தாயே!
நான் -
நல்லவனென்று!

சிப்பிகளே!
நீங்கள்-
முத்தை போல் கருவில்
சுமந்தீர்கள் !

சொத்து சேர்க்கும்-
வேகத்தில் சென்று விட்டோம்-
தூரத்தில்!

செல்வமுள்ள மகனானாலும் -
பெத்தவளுக்கு சோறு கொடுக்காதவன்-
செத்த பிணமே!

வாழும்போது -
பெத்தவளுக்கு-
ஒரு வா[ய்] சோத்தை போடாதவன்!

செத்த பின்னே ஊருக்கே -
சோத்தை போடுவான் -
'கத்தம்'என்ற பெயரில்!

கோழி மிதித்து -
குஞ்சுகள் செத்ததில்லைதான்-
ஆனால்-
குஞ்சு மிதித்து -
நொந்த கோழிகள் -
எத்தனையோ!

அப்பாவி தாயே!

நான் -
உன்னை திட்டினாலும் -
என்னையே-
சுற்றி வருகிறது -
உன் ஆவியே!

தறுதலை!
எனக்கு உன் பாச பார்வை -
மட்டுமே தருகிறது-
ஆறுதலை!

கருவில் சுமந்தும் -
மாதகணக்கில் பாலூட்டினாய் -
எனக்கு !

கொஞ்சம் கூட -
பாசம் காட்டவில்லை-
நான் -
உனக்கு!

உனக்கே -
இந்த கதி!

நாகரிக-
தாய்மார்களே!
"புட்டி "பால் -
கொடுக்குறீர்களே-
அப்படியானால் -

உங்களின் கதி!?

மழலை அழுகையின் மொழி பெயர்ப்பு!

தகப்பன்மார்களே!

திராணி உழைப்பதற்கு
இல்லைஎன்றால் -உங்களுக்கெதற்கு
திருமணம்!?

தாய்மார்களே!

கூந்தல் குறைவுக்கு-
ஒட்டு முடி!

முக அழகை கூட்டிட-
மேக்கப்பு!

தாய் பாலுக்கு -இப்போ
புட்டி பால் !

பாசம் தர என்ன!-
பணி பெண்ணா!?

பெத்தவுடன் தீர்ந்து -
விட்டதா கடமை !

பாசத்தை ஊட்டாமல் -
ஊட்டசத்தை மட்டும் -ஊட்டி
வளர்ப்பது மடமை!

எங்களின் எதிர்கா லத்திற்கு -
உழைப்பதாக கூறுவது -
உங்களின் அறியாமை !

நிகழ்காலத்தை கொன்று விட்டால் -
எதிர்காலம்
எங்கே இருக்கு!

மழலைக்கு தேவை -
இனிப்பு கலந்த -
பசும்பாலல்ல !

பாசம் கலந்த -
தாய் பால் !

இப்போதைக்கு-
 எங்களுக்கு -
பாசம் தான் !

பணமல்ல....!

எல்லை மீறல்!

ஊருக்குள் சென்றது -
கடல் அலை!

எல்லை மீற -
கடலுக்கு -
கற்று கொடுத்தது -
யார்!?

கடற்கரைகளில் -
எல்லை மீறும்'

காதலர்கள் அல்லாமல்-
வேறு -
யார்!?

மழலை பேச்சு!

தெரியாத -
மொழி !

விளங்கும்-
 கவிதை!!

பொறுத்தது போதும்...

கலங்குவதில்லை-
 கதிரவன் -
கண் விழிக்கவில்லை -
நீ என்பதால்!

அடைந்தே -
கிடைப்பதில்லை
பறவை-
 கூட்டினுள் !

நீ அடைந்தே -
கிடக்கிறாய் -
வீட்டினுள் -
என்பதால்!

விவசாயி-
 வெயிலுக்கு பயந்தால் -
நமக்கு -
உணவு எங்கே!

நாம் இமையை -
திறக்க-
முயற்சிக்க விட்டால் -
நமக்கு பார்வை தான்-
 எங்கே!?

சோதனையை -
தாங்காத -
சாதனையாளன் -
இங்கே எங்கே!?

தோல்விகளில் -
பாடம் படி!
திறந்தே இருக்கிறது -உனக்கு
வெற்றி படி!

உனக்காக!

எல்லோருக்கும்-
 ஆச!
தொலைபேசியில்-
 பேச!

தொலைபேசிக்கு -
ஆச!
அன்பே!
நீ எடுத்து பேச!