நம்மிருவர் சிறகிலும் இருவேறு ஓவியங்கள்!
அவ்வோவியத்தை நாமே கண்டிட முடியாததில்தான் இயற்கை வைத்திருக்கிறது ஓர் ரகசியம்!
என்மேலுள்ள ஓவிய அழகினை நீ சொல்ல!
உன்மேலுள்ள ஓவிய அற்புதத்தை நான் சொல்ல !
நாமிருவரும்
சொல்ல ,சொல்ல!
சொல்ல,சொல்ல!
மெல்ல ,மெல்ல!
மெல்ல.மெல்ல!
நம் மனக்குடுவையில் நிரம்பிய வழிகிறது
ஓர் காதல்ரசம்!
மழைக்காலத்தில் ஏழைக்குடிசையில் ஒழுகிடும் மழைநீர்
பாத்திரத்தை நிரப்பி வழிவதைப் போல்!