Thursday 2 July 2015

என்னை மன்னித்து விடுங்கள் !

நான் வாசித்திடாத கவிதைகளே!

நான் ரசித்திடாத விடியற்காலைப் பொழுதுகளே !

நான் எழுதிடாத என்னுள் எழுந்த சிந்தனைகளே !

நான் நடந்திடாத கடற்கரைச்சாலையே!

நான் ஒதுங்கிடாத பனைமர நிழலே!

நான் கலந்திடாத நீதிக்கானப் போராட்டங்களே!

நான் பேசிடாத பால்யகால நட்புகளே!

நான் தெரிந்துக்கொள்ளாத என் மேல் நேசங்கொண்ட இதயங்களே!

உங்களைப் பிரிந்து ஓடும்
என்னை மன்னித்து விடுங்கள் !

மீசை அரும்புவதற்கு முன்னால் உழைக்க 
ஓடினேன்!

இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்!

அன்று
என் முன்னிருந்த கடமைகளுக்காக!

இன்று
என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் கடமைகளுக்காக !

உழைப்பதில் 
எனக்கு கலக்கமில்லை!
தயக்கமில்லை!

ஆனால்
உங்களைப் பிரிந்தேன் என எண்ணுகையில்தான்!

வார்த்தை வசப்படுவதற்கு முன்
பேனா எழுதுவதற்கு முன்!

என் கண்கள் எழுதி விடுகிறது!
கண்ணீரால் கவிதையொன்றை.....!!

        

3 comments:

  1. உழைப்பு என்றும் முக்கியம்...

    ReplyDelete
  2. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    ReplyDelete