அடி வெளுக்கும்
அதிகாலை வானம் !
கடல் விழுங்கும்
மாலைநேர சூரியன்!
ஆழ்கடலின் மௌனம்!
குழந்தைகளின் குறுநகை!
நீளமான தேசிய நெடுஞ்சாலை !
சிறுவர்கள் கட்டும் மணல்வீடு!
நிலவினை மறைக்கும் மேகம்!
மொட்டை பனைமரம் !
கரைவலை இழுத்தச் சொந்தங்களின்
"காய்த்த"கைகள் !
இப்படியான காட்சிகள்
எனக்குத் தெரிகிறது
கவிதைகளாக !
எனக்கு
கவிதைப்புத்தகங்கள் கிடைக்காத
தருணங்களிலெல்லாம்!
அதிகாலை வானம் !
கடல் விழுங்கும்
மாலைநேர சூரியன்!
ஆழ்கடலின் மௌனம்!
குழந்தைகளின் குறுநகை!
நீளமான தேசிய நெடுஞ்சாலை !
சிறுவர்கள் கட்டும் மணல்வீடு!
நிலவினை மறைக்கும் மேகம்!
மொட்டை பனைமரம் !
கரைவலை இழுத்தச் சொந்தங்களின்
"காய்த்த"கைகள் !
இப்படியான காட்சிகள்
எனக்குத் தெரிகிறது
கவிதைகளாக !
எனக்கு
கவிதைப்புத்தகங்கள் கிடைக்காத
தருணங்களிலெல்லாம்!
அருமையான காட்சிகள்! கவிதைகள் ஆனதில் வியப்பில்லை!
ReplyDeleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
கண்ணில் படும் காட்சியெல்லாம் கவிதைகளாக!
ReplyDeleteநல்ல கவிதை. பாராட்டுகள் சீனு.