Tuesday, 14 October 2014

பொறுமை இழந்தேன்..!!

நாவைப்பறித்து விட்டு
பேசச்  சொன்னாய்!

குரல்வளையை அறுத்து விட்டு
பாடச் சொன்னாய்!

மிளகாய்த்தூளை முகத்தில் வீசி விட்டு
சிரிக்கச் சொன்னாய் !

நகத்தை பிச்சியெடுத்து விட்டு
நகச்சாயம் பூசச் சொன்னாய்!

சுவாசத்தை அபகரித்துக்கொண்டு
வாசனையை நுகரச் சொன்னாய்!

மைனாவின் சிறகுகளைப் பிடுங்கி விட்டு
பறக்கச் சொல்லி வான் நோக்கி வீசினாய் !

இத்தனைக்கும் பொறுமைக் கொண்ட நான்!

எப்போது பொறுமையிழந்தேனென்றால்..!

"நீ!எழுதும்போது என்னை நினைக்காதே..!!"-என
நீ சொன்னபோதுதான்!

       

2 comments:

  1. நல்ல கவிதை. கவிதையின் பொருளே அவர் தானே... அவரை நினைக்காது எப்படி எழுத முடியும்? :)

    ReplyDelete