Tuesday, 4 December 2012

"வெளிச்சங்கள்"! (8)

உறவென்று-
சொல்ல -
யாருமில்லை!

பெற்றவர்கள்-
தவறியதால்-
இந்த-
நிலை!

மாமன் என-
ஒருவரிடம்-
தஞ்சம்!

அவரிடமோ-
பாசத்துக்கு-
பஞ்சம்!

வேறு-
 வழியுமில்லை!

ஏச்சும் பேச்சும்-
அவரிடமிருந்து-
கொஞ்சமில்லை!

பிரிந்திடும்-
நேரம்-
வந்தது!

பசியால்-
பரிதவிக்கிற-
நிலை -
அவனுக்கு-
ஏற்பட்டது!

வாழ வழி-
தெரியவில்லை-
இவனுக்கு!

ஒரு-
கை நீண்டது-
இவனை-
தாங்குவதற்கு!

அன்று முதல் -
இவனை படிக்கவைக்க-
அந்த கைகள்-
சுமைகளை-
சுமந்தது!

இன்று-
அவனை-
பட்டதாரியாக்கியது!

படித்தவன்-
மேடையில்!

படிக்க வைத்தவன்-
வருகிறான்-
மேடை நோக்கிய-
பாதையில்!

கைதட்டலில்-
அதிர்ந்தது-
அரங்கமே!

ஒரு இஸ்லாமிய-
சகோதரனுக்கு-
உதவியது-
இந்து சகோதரனின்-
மனமே!

தன் கதையை-
மேடையில்-
சொன்னான்-
பட்டதாரி!

"அரங்கதிலுள்ளவர்கள் "-
கண்களிலோ-
கண்ணீர் துளி!

காணொளி கண்ட -
என் கண்களிலும்-
அதே துளி!

இரு சமூகங்களின் -
ஒற்றுமை-
சுதந்திர கனவை-
நனவாக்கியது!

"அடிமைபடுத்தியவன்-"
"அடித்துகொள்ளட்டும்"-என
வாரலாற்றை-
திரித்து-
எழுதியது!

வரலாற்று-
திரிபுகள்-
வெடிக்காத-
அணு குண்டுகள்-
ஹிட்லர் சொன்னது!

அத்திரிபுகள்-
இன்றும்-
திரியாக-
கலவரதீயை-
அணையாமல்-
வளர்த்து கொண்டிருக்கிறது!

உண்மையான-
வரலாறை-
நாம் என்றைக்கு-
விளங்குவது!?

நம் தேசம்-
திருந்துவது!?

(குமுறல்கள் தொடரும்....)





13 comments:

  1. நியாயமான ஆதங்கம்.
    வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே...
    தொடருங்கள்

    ReplyDelete
  2. விடையற்ற வினாதான் நண்பரே...
    ஆனாலும் விடையை முனைப்புடன்
    அனைவரும் இணைந்து தேடினால்
    கிடைக்கும்..
    ஒற்றுமை எனும் உணர்வை
    முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  3. நல்லதொரு படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உங்களின் கவிதை மிகவும் அருமை.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

    ReplyDelete
  5. குமுறல்களின் கேள்களுக்குப்
    பதிலைத் தேடிக்கொண்டே இருக்கவேண்டியது தான்...

    ReplyDelete
  6. பதில்களற்ற கேள்விகள் சீனி... பல கேள்விகள் நம்முள்ளே.. பதிலைத் தான் தேடிக்கொண்டே இருக்கிறோம்....

    ReplyDelete
  7. மனிதம் மனிதனுள் சிம்மாசனம் வீற்றி இருக்கிறது. அருமை

    ReplyDelete