Tuesday, 11 December 2012

முகலாயர்களே...(3)

நிலவினை-
பாடாத-
கவிஞர்களா!?

நிலவு-
தராத-
கற்பனைகளா!?

வர்ணங்கள்-
ஜாலங்கள்-
புரிவதுண்டு!

ஒரே-
வர்ணம் கொண்ட-
நிலவே!-
நீ!
எத்தனை-
சலனங்கள்-
தருவதுண்டு!

கொள்ளைகொள்ளும்-
குழந்தை-
சிரிப்பாகவும்-
தெரிகிறாய்!

நேசமானவளின்-
முகத்தை-
நினைவூட்டுகிறாய்!

ஒதுக்கியவளின்-
நினைவை-
தூரத்தில்-
இருந்து  தந்து-
துன்புறுத்துகிறாய்!

பிறையாக-
தெரிந்து-
மௌனமாக-
சிரித்தவளின்-
சிணுங்களை-
நினைவூட்டுகிறாய்!

நட்சத்திரங்கள்-
புடை சூழ-
ராணி போல்-
வலம் வருகிறாய்!

வெறித்து பார்க்கும்-
என்னவள்-
பார்வையை -
போலும்!

திரும்பி-
நான் பார்த்தால்-
மறைந்து கொள்வது-
போலவும்!

நிலவே!
பௌர்ணமி-
நாளில்-
ஒளியை -
கொட்டுகிறாய்!

அண்ணாந்து-
பார்க்கையில்-
மேகத்துக்குள்-
மறைந்து-
கொள்கிறாய்!

எத்தனை-
ரசனை வருது-
உன்னை-
பார்த்து!

எழுத முடியாத-
என் நிலையை-
பார்த்து-
எழுத்துக்கள்-
சிரிக்கிறது-
என்னை-
பார்த்து!

படைப்பான-
உன்னையே-
முழுவதும்-
அறிய முடியவில்லை!

உன்னை-
படைத்தவனின்-
பெருமையை-
எப்படி-
வார்த்தைகளில்-
அடக்கி சொல்ல!

"முகலாயர்-"
தலைப்பை-
வைத்தேன்!

முழு நிலவை பற்றி-
எழுதி இருக்கிறேன்!

இரண்டின்-
தொடர்பை-
தொடருங்கள்-
சொல்கிறேன்!

(தொடரும்....)






8 comments:


  1. வணக்கம்!

    சீனியின் பக்கம் வந்தேன்!
    சிலமணி நேரம் நின்றேன்!
    தேனியின் உழைப்பைப் போன்று
    தென்றமிழ் வலையைக் கண்டேன்!
    ஞானியின் ஆழ்கூா் ஆற்றல்!
    ஞாயிறின் தோற்றம்! வன்மை
    மேனியின் வடிவம்! என்றன்
    மெய்நெகிழ் துரைத்தேன் வாழ்த்து!

    ReplyDelete
  2. //இரண்டின்-
    தொடர்பை-
    தொடருங்கள்-
    சொல்கிறேன்!// சீக்கிரம் சொல்லுங்கள் சீனி

    ReplyDelete
  3. அறியும் ஆவலில்.

    ReplyDelete
  4. அருமை அருமை! தொடருங்கள்! தொடர்பறிய காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete

  5. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete