Saturday, 8 December 2012

முகலாயர்களே....(1)

முகலாயர்களே!
ராஜபுத்திர-
அரசர்-
அழைத்ததால்-
பாரதம்-
வந்தீர்கள்!

வந்த-
நீங்கள்-
கொள்ளையா-
 அடித்தீர்கள்!?

உங்கள்-
தேசமான-
காபூலுக்கா-
கொண்டு சென்றீர்கள்!?

இல்லையே-
இங்குதானே-
இருந்தீர்கள்!

மண்ணோடும்-
மக்களோடும்-
மலர்களாக-
மணம் வீசினீர்கள்!

அரண்மனைகளையும்-
ஏன்!?-
இன்றைய தலைநகர்-
நிர்மானித்தவர்களும்-
நீங்கள்!

செங்கோட்டையில்-
கொடியேற்றுவார்கள்-
சுதந்திர-
தினத்தன்று!

அது-
நேதாஜி அவர்களின்-
ஆசை என்று!

செங்கோட்டையின்-
சொந்தங்களுக்கு-
இடஒதுக்கீடு கூட-
கிடைக்க மறுக்குதே-
இன்று!

வெள்ளையன்-
கொள்ளையிட-
வந்தான்-
நம் -
தேசத்தை!

அப்போது-
ஆண்ட நீங்கள்-(முகலாயர்கள்)
வளமிக்க நாடாக-
மாற்றி இருக்குறீர்கள்-
நம் தேசத்தை!

அப்படிஎன்றால்-
நால்லாட்சிதானே-
ஆண்டிருக்கும்-
நம்-
தேசத்தை!

அப்போது-
ஏன்-
நீங்கள்-
கொடுங்கோலர்கள்!

கொள்ளையிட்டு-
அடிமைபடுத்திய-
வெள்ளையர்கள்-
நாகரீக -
புருஷர்கள்!

கூப்பிட்டதால் வந்த-
நீங்கள்-
"படை எடுத்தவர்கள்"!

சுரண்ட வந்த-
வெள்ளையர்கள்-
"வருகை புரிந்தவர்கள்"!

இவ்விசத்தை-
சுமக்கிறது-
பாட புத்தகங்கள்!!

ஏன்-
இந்த-
விஷ வித்துகள்!

ஒரு-
சமூகத்திற்கு-
எதிரான-
வன்மங்கள்!

(தொடரும்...)





12 comments:

  1. //விசத்தை-
    சுமக்கிறது-
    பாட புத்தகங்கள்//

    உண்மைதான் சீனி..
    பாலில் விஷம் கலந்தால்
    குடிப்பவனுக்கு மட்டும்தான் ஆபத்து
    நூலில் விஷம் கலந்தால்
    படிப்பவனுக்கு ஆபத்து..
    படித்துக் கொடுப்பவனுக்கு ஆபத்து
    சமூகத்துக்கு ஆபத்து
    தேசத்துக்கு ஆபத்து
    பிஞ்சு நெஞ்சில் நஞ்சைக் கலக்கும் முயற்சியில்
    சில பாடப் புத்தகங்கள் இருப்பதால்தான்
    'கவிக்கோ' அழகாக கூறுவார்:
    முன்பெல்லாம் பள்ளிக்கு
    குழந்தைகளை அனுப்பும்போது
    மறக்காமல் சொல்லுவோம்:
    குழந்தைகளே சமத்தாயிருங்கள்..
    புத்தகங்களைக் கிழித்துவிடாதீர்கள் என்று.
    ஆனால் இப்பொழுது மறக்காமல் சொல்லவேண்டியது:
    புத்தகங்களே.. சமத்தாயிருங்கள்
    எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்''

    ReplyDelete
  2. புத்தகங்களே.. சமத்தாயிருங்கள்
    எங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்''
    //யோசிக்க வைத்தது// பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  3. நியாயமான கோபத்தில் அழகிய கவிதை வரிகள்

    ReplyDelete
  4. யோசிக்க வைத்த கவிதை! உண்மைதான்! கால மாற்றத்தில் நண்பனை பகைவனாக்கிவிட்டோம்!

    ReplyDelete
  5. நல்ல வரலாற்று ஆவணங்களை கவிதையாக சொல்லி இருக்கீங்கள். உங்கள் பணி தொடரட்டும் தோழரே.

    ReplyDelete
  6. Replies
    1. theepz!

      ungal muthal varavukku mikka nantri!

      Delete