Wednesday, 19 December 2012

முகலாயர்களே.....(11)

மனிதர்களின்-
வாழ்வானது!

பலதரப்பட்ட-
பழக்க வழக்கங்களை-
உள்ளடக்கியது!

பல தேச-
கலாச்சாரங்களை-
நாமே அறியாமல்-
பின்பற்றுவது!

பண்டைய தமிழனின்-
உழைப்பை -
உள்வாங்கி உள்ளதாம்-
பிரமிடுகள்!

அதற்காக-
பிரமிடுகளை-
நம் வீடென்றால் -
எத்தனை பேர்-
நகைப்பார்கள்!?

திருக்குறள்-
தனது -
வாழ்வின் வழிகாட்டி-என
சொன்னார்-
அயல் நாடு-
அறிஞர் ஒருவர்!

அவரை-
தமிழ் நாட்டுக்காரர்-
என்றால்-
எத்தனை பேர்-
ஒத்து கொள்வார்கள்!?

இன்றைக்கு-
பல மனைகளில்-
மேற்கத்திய கழிவறைகள்-(வெஸ்டர்ன் டாய்லட்)
வைக்கிறார்கள்!

அதற்காக-
சில வருடம்-
கழித்து-
அயல் நாட்டினர்-
தன் வீடென்றால்-
எத்தனை பேர்-
அமைதி கொள்வார்கள்!?

அவ்வாறே-
நமது -
பண்டைய கால-
கட்டிடங்களில்-
மிளிர்ந்தது-
திராவிட கட்டிட-
கலைகள்!

வழிபாட்டு-
தளங்கள்!

வீட்டு மனைகள்!

இன்னும்-
அரண்மனைகள்!

இன்னும்-
இருக்கிறது-
எண்ணிலடங்காதவைகள்!

இரு சமூகங்களின்-
வழிபாட்டுத்தலங்கள்-
ஒரே மாதிரி-
தூண் என்றால்!

அதன்-
அர்த்தம்-
உடைத்துதான்-
கட்டியது-
என்றால்!

இவைகள்-
எத்தனைதான்-
பொய்களை-
பரப்புமோ!?

இன்னும்-
எத்தனை-
உயிர்களை-
பறிக்குமோ!?


ஔரங்கசீப்-
பிறர் மத-
வழிபாட்டு தளங்களை-
உடைத்தவர்!

என்றெல்லாம்-
தன் மேல்-
பழியை-
சுமந்துள்ளவர்!

இன்றும்-
நாடெங்கும்-
பல தொண்மை-
தளங்கள்-
இருக்கின்றது!

அப்பொழுது-
"அவர்"-
கண்களில் இருந்து-
எப்படி தப்பித்தது!?

கஜோரா-
அஜந்தா -
சிற்பகலைகள்-
இன்றும்-
இருக்கிறதே!?

இவைகளெல்லாம்-
கலவரக்காரர்களின்-
கூற்றை பொய்யென-
உரைக்கின்றதே....!!

(தொடரும்....)





6 comments:

  1. உண்மைதான் சகோ

    ReplyDelete
  2. கஜோரா-
    அஜந்தா -
    சிற்பகலைகள்-
    இன்றும்-
    இருக்கிறதே!?

    உண்மை தான்.

    ReplyDelete
  3. உண்மைகளை ஒவ்வொன்றாய் விவரிக்கும் அழகு சிறப்பு! நன்றி!

    ReplyDelete