Tuesday, 18 December 2012

முகலாயர்களே......(10)

வெள்ளையர்கள்-
வியாபார வழி-
வருமானம்!

அதை விட-
மிகுதியாக-
இருந்தது-
தன்மானம்!

வந்த-
வேலையை-
பார்த்தால்-
பொறுத்தார்!

பிழை ஒன்று-
செய்தால்-
வெறுத்தார்!

அன்றைய-
உலகில்-
முப்பது சதவிகித-
மக்களை-
ஆண்டார்!

ஆனாலும்-
ஆடம்பரம்-
தவிர்த்தார்!

நல்லவர்களுக்கு-
நாட்டில்-
இடம் தந்தார்!

அழிச்சாட்டியம்-என்றால்
"களம் "-
கண்டார்!

அன்றைக்கு-
எவரி -என்றவன்
கடற்கொள்ளையில்-
ஈடுபட்டார்!

கோபத்தில்-
ஔரங்கசீப்-
கொதித்தார்!

வெள்ளைய -
அதிகாரிகளை-
சிறையில்-
அடைத்தார்!

வெள்ளையர்கள்-
ஆறு லட்சம்-
பவுண்டுகள்-
அபராதம்-
கட்டினார்கள்!

மண்டியிட்டு-
மன்னிப்பு கேட்டு-
வயிறு பிழைத்தார்கள்!

ஔரங்கசீப்-
"இருந்தவரை"-
ஆங்கிலேயர்கள்-
அடங்கி-
ஒடுங்கி கிடந்தார்கள்!

அவ்வீர-
ஔரங்கசீபை-
வசை பாடுகிறார்கள்!

நன்றி கெட்ட-
கூட்டங்கள்!

இன்னைக்கு-
என்ன நிலமைங்க-
ஆகி போச்சி!!?

பணமெல்லாம்-
"கருப்பாக-"
சுவிஸ்ல-
பதுங்கிருச்சி!

"சில்லரையிலும்"-
மண்ணு -
விழுந்திருச்சி !

ராமேஸ்வர -
கடலின் நிறம்-
சிகப்பாகிருச்சி!!

போபல்-
நடந்து-
இருப்பத்தேழு-
வருசமாச்சி!

இழப்பீடு கூட-
கிடைக்காம-
அம்மக்கள்-
வாழ்வு-
கண்ணீரில்-
கரைந்து போச்சி!

இதுல-
கூடன்குள-
திறப்பு பற்றி-
பேச்சி!!?

தேவைதான்-
தேச வளர்ச்சி!

அதைவிட-
முக்கியம்-
மக்களின்-
உயிர் மூச்சி!

என்ன செய்ய-
நாம புலம்புவதே -
வேலையா -
போச்சி!!

ஆனாலும்-
நம்பிக்கை துளிர்கிறது-
நம் நாட்டில்-
மலரும் நல்லாட்சி!

(தொடரும்.....)






13 comments:


  1. வணக்கம்!

    நல்லாட்சி வேண்டுமென நல்கும்..பா! போற்றுகிற
    வல்லாட்சி வேண்டுமென வார்த்த..பா! - வெல்லமெனச்
    சொல்லாட்சி கண்டேன்! சுடா்தமிழ்ச் சீனியிடம்
    பல்லாட்சி கண்டேன் படா்ந்து!

    ReplyDelete
    Replies
    1. ayya!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri ayya!

      Delete
  2. தங்களின் படைப்பை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள்http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_9668.html நன்றி!

    ReplyDelete
  3. தொடர்கவிதை சிறப்பு! தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இதுல-
    கூடன்குள-
    திறப்பு பற்றி-
    பேச்சி!!?
    ///////////////
    :(

    ReplyDelete
    Replies
    1. aathmaa sako!

      ungal varavukku mikka nantri!

      Delete
  5. Replies

    1. வணக்கம்!

      தங்களின் மின்அஞ்சல் முகவரியை அறிய தரவும்.

      மணிச்சரம் மின்னும்! மலா்ச்சரம் மின்னும்!
      அணிச்சரம் மின்னும் அணிந்து! - பணிந்தேன்
      கலைச்சரம் மின்னும் கவிச்சரச் சீனி
      வலைச்சரம் மின்னும் வளா்ந்து!

      Delete
    2. ayya!

      maru varavurkkum-
      mikka nantri!

      Delete
  6. ம்ம் வேதனையோடு ஆட்சியைச்சாடும் தொடர்கவிதை தொடருங்கள் சகோ நல்லாட்சி வரும் என்ற கனவில்!

    ReplyDelete