Wednesday, 26 December 2012

முகலாயர்களே...(18)

உலகை-
உலுக்கி-
உள்ளது-
போர்கள்!

பூமியை-
குளிக்க-
செய்திருக்கிறது-
குருதிகள்!

மண்ணை-
வெற்றி-
கொண்டால்!

அவ்வளங்களை-
கொள்ளை -
கொள்வதால்!

பெண்களை-
சொல்ல வாய்-
கூசும்-
"அளவுக்கு"-
நடப்பதால்!

சடலங்களால்-
மலை-
அமைப்பதால்!

இதனையே-
சாதனையாக-
எண்ணினார்கள்-
குரும்புத்தியால்!

இது-
மடமை காலம்!

படிப்பறிவில்லாத-
காலம்!

மனிதநேயம்-
மடிந்த காலம்!

எப்படியெல்லாம்-
முடியுமோ-
உங்களால்-
திட்டி கொள்ள-
கூடிய காலம்!


அதெல்லாம்-
உண்மைதாங்க!!

அக்காலம்-
கொடுமைதாங்க!?

இப்பமட்டும்-
என்ன-
"வாழுதுங்க"..!!?

பேருந்தில்-
ஒரு-
சகோதரி-
சீரழிக்கபட்டாள்!

ஒரு சில-
நாய்களால்-
குதறபட்டாள்!

மனிதநேயம் உள்ள-
அத்தனை பேரும்-
மன சஞ்சலத்தால்-
அலைக்கழிக்கபட்டார்கள்-
அச்சம்பவத்தால்!

இது போன்ற-
சம்பவங்கள்!

இதை விட-
கொடூரமானவைகள்!

நடந்திருக்கிறது-
நடந்துகொண்டுதான்-
இருக்கிறது!

யாருக்கோ-
நடக்கிறது!

நமக்கென்ன-
வந்தது!?

இப்படியாக-
நாமெல்லாம்-
இருந்தது!

இப்பொழுது-
தலை நகரை-
தலைகுனிய-
வைத்திட்டது!

குழந்தைகள்-
பெண்கள் இருக்கும்-
இடம்களில்-
அம்பு எய்தல்-
கூடாது!

இது-
நபிகளார்-
வாழ்வானது!

யுத்தங்களிலும்-
தத்துவம்-
சொன்னது!

எதிரிகளின்-
நாற்பத்திரண்டு-
பெண்கள்-
குழந்தைகள்-
சமயலறையில்-
ஒளித்து-
வைத்திருந்தார்!

பகதூர்ஷா-
மன்னர்!

உயிரைகாக்க-
இதனை-
செய்தார்!

எதிரிகளின்-
ரத்த உறவுகளை-
கூட-
நேசித்தார்!

தன்-
சிப்பாய்களை-
கட்டுபடுத்திடுவார்!

தேசமெங்கும் வந்த -
சிப்பாய்கள்!?

ஒளிந்து இருந்தவர்களை-
ஒளித்து கட்ட-
முனைந்தார்கள்!

மன்னரோ-
கலங்கி போய்-
நின்றார்கள்!

அவர்களின்-(ஒளிந்து இருந்தவர்கள்)
கொலைகளுக்கு பின்-
ஆறாத-
ரணங்களுடனே-
வாழ்ந்தார்கள்!

சொல்லுங்க-
அப்பேர்பட்ட-
ஆட்சியாளன்-
எங்கே!?

பிணங்களின் மேல்-
ஆட்சிகள்-
புரிகின்ற-
இன்றைய-
யோக்கியர்கள்!!-
எங்கே...!?

(தொடரும்....)




3 comments:

  1. அன்றைய நாகரிகம் அற்ற கற்காலத்தில் கூட மனிதன் ஒழுக்கம் நீதிகளுக்கு பயந்தான் ஆனால் இன்றோ ஓடுகிற பஸ்ஸில் பெண்ணை கற்பழிக்கும் அளவுக்கு நாகரிகத்தில் வளர்ந்திருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      mikka nantri!

      vanthamaikku..

      Delete