Friday, 7 December 2012

வெளிச்சங்கள்"! (10)

"நடந்த காரியங்களுக்கு"  -
காரணத்தை-
கண்டறிந்தவன்-
நீ!

எல்லாம்-
"செய்து விட்டு"-
எதுவும் -
தெரியாததுபோல்-
திரிந்தவர்கள்-
தெருவுக்கு-
இழுத்தவன்-
நீ!

"காவலாளிகள்"-என்று
சொல்லி கொண்டிருந்தவர்களை-
காவாளிகள்-என
உலகிற்கு காட்டியவன்-
நீ!

எங்கிருந்து-
தொடங்குது-
ஏன் -
தொடர்கிறது-
என்பதற்கு எல்லாம்-
பதிலை-
படித்தவன் -
நீ!

தேசபக்தன் -என்று
"மெச்சி" கொண்டவர்களை-
நெஞ்சி சட்டையை-
பிடித்து இழுத்தவன்-
நீ!

அநியாங்கள்-
சுமத்தப்பட்ட-
சமூகத்தை -
சுத்தம்-
செய்தவன்-
நீ!

தப்பு செய்த-
உண்மை குற்றவாளிகளை-
தண்டிக்கணும்-என்ற
நெஞ்சழுத்தம்-
கொண்டவன்-
நீ!

மர்மங்களை-
மறைக்காமல்-
வெளியுலகிற்கு-
சொன்னவன்-
நீ!

ஏதோ-
ஒன்றை மறைக்க-
எங்கோ ஓன்று-
நடக்க-
சம்பந்தபடுத்தி-
பார்த்தவன்-
நீ!

உன் மரணத்திலும்-
மர்மங்களை-
மறைத்து கொண்டே-
மறைந்து-
விட்டாயே!
நீ!

நீ!
வீரன் அல்ல-
மாவீரன்-
ஹேமந்த் கர்கரே-
நீ!

உன்னை போன்ற -
ஒரு சில-
வீரர்களால்தான்-
நீதி-
இன்னும் -
சாகாமல்-
இருக்கு!

உன்னை போன்றவர்கள்-
"நடவடிக்கைகள்-"
பலரின் தூக்கத்தை-
"கெடுத்து இருக்கு"!

எங்கிருந்தோ-
வந்தவனுங்க-
"உண்ம்மையை" சொன்ன -
உன்னை கொன்றதுதான்-
மர்மமாகவும்-
சந்தேகங்களையும்-
புதைத்து-
இருக்கு....!!!!!

---------முற்றும்-----

8 comments:

  1. அதை நினைத்தாலே மிகவும் வருத்தமாக தான் இருக்கு...

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தொடருங்கள் நல்ல வரிகள்

    ReplyDelete
  3. வெளிச்சம் போட்டு வெளக்கியமைக்கு மிக்க நன்றி! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. உன்னை போன்ற -
    ஒரு சில-
    வீரர்களால்தான்-
    நீதி-
    இன்னும் -
    சாகாமல்-
    இருக்கு!//


    மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    சிந்திக்கத் தூண்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டாலும் அவர் ஒரு வாழும் நீதி.

    ReplyDelete