Monday, 3 December 2012

வெளிச்சங்கள்"! (7)

காலங்காலமா-
தொடரும்-
கொடுமை!

நம் மண்ணை-
ரத்த சகதியாக்குது-
தீண்டாமை!

எத்தனையோ-
சட்டங்கள்-
போட்டாச்சி!

அதெல்லாம்-
கிணத்துல-
போட்ட -
கல்லாச்சி!

"ஒரு காதல்"-
சேர்ந்திருச்சி!

பல வீடுகள்-
எரிஞ்சிருச்சி!

அந்தோ-
பரிதாபம்-
மனிதர்களா-
கொல்லபட்டார்கள்!?

இல்லை-
மனிதங்களையல்லவா-
கொல்கிறார்கள்!?

பிரச்சனையில்லாத-
உலகில்லைதான்!

"பிறப்பை"-
வைத்து-
ஏன் இந்த-
கொடுமை நிலை!?

உணவுக்காக-
"பிராணிகளை"-
கொல்வதை-
எதிர்க்கிறாங்க!

உயிரோட மக்கள்-
எரியும்போது-
மௌனிக்கிறாங்க!

பெரும்பான்மை-
ஓட்டு வாங்கினால்தான்-
ஆட்சியை -
பிடிக்கலாம்ங்க!

பெரும்பான்மையான-
சமூகம்-
இங்கே-
தாழ்ந்தவனாங்க!?

நிறங்கள்-
உருவங்கள்-
மனிதர்கள்-
அடையாளம்-
கண்டுகொள்ளவே!

இதை வைத்து-
சில மிருகங்கள்-
கொல்லுதே!

ஏன் ஒரே-
சமூகமாக-
இறைவன் படைக்கவில்லை-
சிலரின்-
கூப்பாடு!

இங்குதான்-
பயன்படனும்-
நம் பகுத்தறிவின்-
செயல்பாடு!

தண்ணீரை-
வாயினுள்-
செலுத்தினாலும்!

மூக்கினுள்-
செலுத்தினாலும்!

சேரும் இடம்-
வயிறுதான்!

இதுபோலவே-
நல்லதையும்-
கெட்டதையும்-
படைத்துள்ளான்-
இறைவன்!

இதுல-
வியாக்கியானங்கள்-
கொண்டு அலைகிறான்-
மனிதன்!

தெளிந்தவன்-
அறிஞன்!

தெளிவில்லாதவன்-
மூடன்!

பிறப்பால்-
குலத்தால்-
யாரையும்-
உயர்ந்தவன் -என்று
சொல்லவில்லை-
படைத்தவனே!

நமக்கென்னடா!-
உரிமை இருக்கு-
"அற்ப துளியில்-"
பிறந்தவனே!

(குமுறல்கள் தொடரும்.....)

16 comments:

  1. நமக்கென்னடா!-
    உரிமை இருக்கு-
    "அற்ப துளியில்-"
    பிறந்தவனே!
    /////////////

    அப்பட்டமான உண்மை சகோ

    ReplyDelete
  2. பிறப்பால்-
    குலத்தால்-
    யாரையும்-
    உயர்ந்தவன் -என்று
    சொல்லவில்லை-
    படைத்தவனே!

    குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் !

    ReplyDelete
  3. சமூகத்தின் தலையாய பிரச்சினையை கவிதை வரிகளில் அழகு மிளிற கொணர்ந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. சிறப்பானதொரு சிந்தனை! ஒன்று படுவோம்! நன்றி!

    ReplyDelete
  5. மனங்கள் மாற வேண்டும்!

    ReplyDelete
  6. //பிறப்பால்-
    குலத்தால்-
    யாரையும்-
    உயர்ந்தவன் -என்று
    சொல்லவில்லை-
    படைத்தவனே!

    நமக்கென்னடா!-
    உரிமை இருக்கு-
    "அற்ப துளியில்-"
    பிறந்தவனே!//

    நல்ல சிந்தனை....

    ReplyDelete
  7. நல்ல உணர்வுபூர்வமாய் எழுதி இருக்கீங்கள் வாழ்த்துக்கள் தோழரே.

    ReplyDelete
  8. குமுறல்கள்... வெளிச்சத்தில் வந்தால் தான் அதன் விளக்கம் புரியும்.
    தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete