Thursday, 20 December 2012

முகலாயர்களே.....(12)

அஸ்தமனமே-
இல்லாத-
ஆட்சியென-
இருந்தவர்களை!

அகங்காரங்களை-
கிரீடமாக-
சுமந்தவர்களை!

ஆட்டங்கான-
செய்தவர்!

முதல் சுதந்திர-
போராட்ட நாயகர்!

அறிக்கை போர்-
நடந்தி கொண்டு-
"பீற்றி"கொள்ளும்-
இந்நாளில்!

அறுக்கவும்-
அறுபடவும்-
போர்க்களம்-
கண்டார்-
அந்நாளில்!

கொள்கை கொண்டவர்களை-
குலை நடுங்க -
செய்வது-
பாசம்!

அப்பாசத்தை-
மிஞ்சி இருந்தது-
அவரிடன்-
ரோசம்!

களம் காண-
துணிந்தவர்-
எண்பத்தி இரண்டு-
வயதில்!

போராட்ட தலைமை-
பதவி-
அமர்ந்தது-
அவரது-
தலையில்!

எத்தனை-
அரசர்கள்-
வெள்ளையனுக்கு-
கப்பங்கட்டி-
 வாழ்ந்தார்கள்-
வாயை மூடி!

கப்பமா!?-என
கர்ஜித்ததில்-
சிலும்பியது-
அந்த சிங்கத்தின்-
பிடரி முடி!

"மன்னிப்பு-
எனக்கு பிடிக்காத-
வார்த்தை "-என
வசனம் பேசியவர்-
எதிர்க்கட்சியாக-
 பதவி ஏற்பு!

"அவ்வார்த்தையை-"
உச்சரிக்காமல்-
உண்மையாக-
இருந்த நாயகன்-
பெயரோ-
இருட்டடிப்பு!

ஆம் -
அவர்தான்-
மாமன்னர்!

முகலாய வம்சத்தின்-
வழி வந்த-
பேரரசர் பகதூர் ஷா ஜாபர்!!

(தொடரும்......)





13 comments:

  1. நல்ல கவிதை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  2. நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  3. அரிய தகவல்களை அள்ளி தரும் தொடர் கவிதை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தொடருகிறேன் சீனி ஐயா.

    ReplyDelete
  5. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete