Sunday, 30 December 2012

முகலாயர்களே....(22)

"ஒண்ட வந்த-
பிடாரி-
ஊர் பிடாரியை-
விரட்டினது-
போல!

விழும் நிழல்களை-
தனக்கே-
சொந்தமென-
நிலங்கள்-
வாதிடுவது-
போல!

பசுமையோடு-
கலந்த-
மக்களை-
கொன்றுவிட்டு-
நிலத்தை-
அபகரித்து விட்டு-
பசுமை புரட்சின்னு-
சொல்வது-
போல!

ஜனங்களை-
பிணங்களாக்கி விட்டு-
ஜனநாயகத்திற்கு-என
சொல்வது-
போல!

பொழைக்க வந்த-
வெள்ளையர்கள்!

அடிமடியிலேயே-
கை வைத்தார்கள்!

வியாபாரம்-என
வந்து விட்டு!

நயவஞ்சகத்தால்-
மக்களை-
பிளந்து விட்டு!

தேச வளங்களை-
சுரண்டி கொண்டு!

மன்னரை-
கைது-
செய்வார்களாம்!

ராஜ துரோக-
வழக்கும்-
போடுவார்களாம்!

யாருக்கு-
யார் -
வழக்கு-
போடுவது!?

ராஜா பகதூர்ஷாதான்-
அவ்வழக்கை-
போடணும்-
அவர்களுக்கு!

மண்ணை-
ஆண்டவன்-
கைதியாம்!

வயிற்றை-
கழுவவந்தவன்-
நீதிபதியாம்!

மன்னருக்கு-
கொடுக்கப்பட்ட-
தண்டனை-
இல்லை-
அநியாயம்-
ஆயுள் தண்டனையாம்!

ஆங்கிலேயர்கள்-
செய்தது-
துரோகம்!
துரோகம்!
துரோகம்!

களங்கமில்லாமல்-
பகதூர்ஷா-
செய்தது-
தியாகம்!
தியாகம்!
தியாகம்!

அந்தோ-
பரிதாபம்-
மறந்து போனது-
அவரின்-
சமூகமும்!

நம்-
தேசமும்..!!

(தொடரும்.....)



3 comments:

  1. rajesvari saki..!

    mikka nantri!
    ungalukkum....

    ellaanaalum..-
    ellaa nimidamum..-
    puththaandukalthan..

    ReplyDelete
  2. சிறப்பானதொரு வரலாற்று நிகழ்வு தொடர்ந்து வர இயலவில்லை இனி தொடர்கிறேன் நேரம் இருக்கும் போது விடுபட்டதை படிக்கிறேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. sasi sako!

      mikka nantri !

      ungalukkum vaazhthukkal...

      Delete