Friday 24 October 2014

தேடுகிறேன் ...!!

கவலையில்லாத மனிதர்களை..!

பொன்னை விரும்பாத பெண்டிர்களை.!

விடுதலையை நேசிக்காதப் போராளிகளை!

தமிழகத்தில் மின்வெட்டில்லாத ஒரு நாளை..!


தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாத அரசியல் கட்சிகளை..!

தோல்வியைச் சுவைக்காத வெற்றியாளர்களை..!

டாஸ்மாக் குறுக்கிடாதச் சாலைப் பயணத்தை.!

பாலியல் வன்கொடுமையில்லாத நாளிதழை..!!

தேடுகிறேன் !

கிடைக்காதென்றுத் தெரிந்தும்
தேடுகிறேன் !!

       

1 comment:

  1. தொடர்ந்து தேடுங்கள்... கிடைத்தாலும் கிடைக்கலாம்!

    ReplyDelete