எல்லோரும் கடைசிவரை சேர்ந்து வாழ்வோம் என தான் கல்யாணம் செய்துக்கொள்கிறோம்.ஆனால் கால ஓட்டத்தில்,கருத்து வேறுபாட்டினாலோ,இறப்பினாலோ,இன்னும் சில பல காரணத்தினாலோ,ஆணோ/பெண்ணோ வாழ்க்கைத் துணையை விட்டு பிரியும் கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
தனித்து ஒழுங்காக,ஒழுக்கமாக வாழும் அந்த ஆணையோ/பெண்ணையோ, இந்த உலகம் சும்மா விடுகிறதா !?என்றால் ,அதுவும் இல்லை.அதற்கும் கட்டுக்கதை கட்டி அவர்களது காயம்பட்ட வாழ்க்கயில் கல்லை எறிகிறது.இந்த கேடு கெட்ட உலகம்.
சரி,தனித்து வாழ்வதால்தானே இந்த அவலச்சொல்,வேறொரு வாழ்க்கை அமைத்துக் கொள்ள முயற்சித்தால்,அந்த ஆணையோ/பெண்ணையோ ,இது தேவையாக்கும்..!?
இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டானே (ளே) னு குத்திக் கிழிக்கிறது.நரம்பில்லாத நாக்குகள்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உறவுகளே!இன்றைய காலகட்டத்தில் "தப்பானவழி" உறவைக்கூட சப்பைக் கட்டு கட்டிக்கொண்டு நியாயப்படுத்துகிறோம்.அதே நேரத்தில் சரியான வழியில் வாழ்க்கை அமைத்தால் அதனை எட்டி மிதிக்கிறோம்.மரணப்படுக்கையில் கிடக்கையில் மூச்சுவிட திணறும் ஒருவரது வாயில் பாலை ஊற்றுவதுப் போலுள்ளது.வாழ்க்கையை வெறுத்துக் கொண்டு இருக்கும்,அவர்களது வாழ்க்கையில் நாம் குறை கூறுவது.
நம் வாழ்க்கையில் மனைவியையோ/கணவனையோ "பிரிந்து" வாழும் நிலை ஏற்பட்டால்,காலமெல்லாம் தனியே இருக்க முடிந்தால் இருந்துக் கொள்ளுங்கள்.அது உங்களது விருப்பம்,அதில் யாரும் தலையிட முடியாது.அதே நேரத்தில் மற்றவர்கள் விசயத்தில் ,தலையிட நமக்கும் உரிமை கிடையாது.
"வலியும்,வேதனையும் வந்தவர்களால் மட்டுமே உணர முடியும்,அது நமக்கு வராத வரை வேடிக்கையாகத்தான் தெரியும்"
அவசியமான கருத்து பாராட்டுகள்
ReplyDelete