71)
என் மடிச் சேர்ந்த
மழலை நீ!
உன் தோள் சாய்ந்த
பாலகன் நான்!
--------------------
கவிதையே..!!(72)
------------------
என்னைப் பிடிக்கும்
என்பவர்களை விட !
என் எழுத்தைப் பிடிக்கும்
என்பவர்களை!
ஏனோ
எனக்கு ரொம்ப பிடித்து விடுகிறது !
----------------------------------
கவிதையே..!!(73)
------------------
நீர்த்துளியாய் என் நெஞ்சூற்றில்
நீ கசிந்திடுகையில் நான் உணரவில்லை!
நீ என் ஆழ்மனக் கிணற்றை
நிரப்பிட வந்த வெள்ளப்பெருக்கு என்பதனை!
----------------------------
கவிதையே..!!(74)
-------------------
"ச்சும்மா" "ச்சும்மா " என்னிடம் நீ
"ச்சும்மா "னு சொல்லாதே!
"ச்சும்மா "னு நீ சொல்லும் வார்த்தை
"ச்சும்மா "வாவது என்னை ஒரு கவிதை எழுதிட வைக்கிறது !
-----------------------------
கவிதையே..!!(75)
------------------
காதலை விட
கவிதையே சிறந்தது!
ஆம்
காதல் காயத்தைத் தருகிறது!
கவிதை காயத்திற்கு மருந்திடுகிறது!
-----------------------------------
அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎளிமையாக ஆயினும்
ReplyDeleteமனம் ஆழம் தொடும்படியாக...
மனம் கவர்ந்த கவிதைகள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அனைத்தும் அருமை.
ReplyDelete