Friday, 6 January 2017

நீயில்லை ..!

நீள் கடல்
நுரை தள்ளிய கடல் அலை
தாழப் பறக்கும் கடல் புறா
மணலில் பதிந்த மழலைப் பாதம்
சலசலத்த பனை ஓலை
காற்றில் பறந்த காகிதம்
சுண்டலில் மணத்த தாளிப்பு வாசம்

இத்தனையும்
என் காதில் சொன்ன கவிதையை
உன்னிடம் நான் சொல்லிட
என்னருகே நீயில்லை!


1 comment: