Thursday, 23 June 2011

காற்றாக நீ!

தென்றலானாய் -
காதலியாக-
வந்த போது!

சூறாவளியாக மாறினாய் -
நீ!-
மனை வியானபோது!

சுவாசிக்க முடியவில்லை-
உன்னை-
நான் பிரிந்து -
வாழும்போது!

சொல்கிறேன் -
முத்தாய்ப்பாய் -
இருந்து இருக்கிறாய்-
நீ என் மூச்சு  காற்றாய்!

Monday, 6 June 2011

வந்து விடு!

என்னவளே!
நீயாக சென்று-
கடலில் குளித்து விடு !

முடியாதென்றால் -
நீ குளித்த-
நீரை கொஞ்சம் -
கடலில் கொட்டி விடு!

அழகியே!
பலர் மகிழ்வதுண்டு-
கடலில் குளிப்பதால் !

கடலுக்கு மகிழ்ச்சியோ -
நீ வந்து -
குளிப்பதால்!

முத்தாக-
 ,மழை விழுந்திட -
வேண்டும்!
சிப்பியை கண்டு!

இந்த கடல் -
முத்தாக
மின்னுவதோ -
உன்னை கண்டு!

காலைக்குள்-
 வந்து விடு -
கண்டு விட -
கடலை !

இல்லைஎன்றால் -
உன்னை-
காண வந்து விடும் -
ஒரு ஆழி பேரலை!

புகைச்சல்!!

தீக்குச்சியாக -
இருந்து கொள்வோம் -
கரு மருந்து நீயாக-
குச்சி நானாக -
உன்னோடு நானும்-
எரிந்து கொள்வேன்!

குத்து விளக்காக -
இருந்து கொள்வோம் -
நெருப்பு நீயாக -
திரி நானாக-
உனக்குள் நான்-
மூழ்கிகொள்வேன்!

அகல் விளக்காக -
இருந்து கொள்வோம்-
எண்ணெய் நீயாக -
குடுவை நானாக -
உன்னை நான்-
சுமந்து கொள்வேன்!

எரி மலையாக -
இருந்து கொள்வோம்-
நெருப்பு பிழம்பு நீயாக -
மலை நானாக -
என் மீது -
நீ!வடிந்து கொள்வாய்!

அப்படியெல்லாம் -
இல்லாமல் -
எரியும் நெருப்பாக-
நான் இருக்கும்போது -
ஈர "சாக்காக" -
என் மீது-
விழுந்து விட்டாயே!

புகை கிளம்பி-
பலருக்கு-
 கண் எரிச்சல் -
உண்டானதே!

காரணம் -
தெரிந்த பின்னே -
கண் எரிச்சல் -
வயிதெரிச்சலாக-
மாறியதே!

கட்டைகள்!

நல்ல கட்டை !
நாட்டு கட்டை,!

தேக்கு கட்டை,!
சந்தன கட்டை,!-
என்றெல்லாம் !

வஞ்சிகளை வர்ணிக்கும்
வாலிபர்களே!

வர்ணிப்புகளுடன்
நிறுத்தி கொள்ளுங்கள் !

பட்டவன் சொல்கிறேன் !

தொட்டு விடாதீர்கள்!

அவர்கள் சுடும்
''கொள்ளி'' கட்டைகள்!

குறுக்கிடாதே!

 தூரத்தில் -
இருந்து கொண்டே-
கூட்டத்தில் -
இருக்கும் என்னை-
தாக்கும் உனது கண்ணே!

உனது பார்வையும் ,சிரிப்பும்-
என்னை மகிழ்ச்சியில் -ஆழ்த்தியது !
என்பதை விட நெருப்பில் அல்லவா -
வீழ்த்தியது!

பார்வை பார்த்து கொண்டு -இருக்கும்போதே -
காலம் கழிந்து கொண்டும் -
கரைந்து கொண்டும் இருந்த்தது!

பட்டு சேலை படபடக்க-
பொன்னகை மினுமினுக்க-
சிரிப்பு கலகலக்க-
காரில் வந்தியாம்-கூடவே
உன் கணவனிருக்க!

இவ்வாறு கேள்விபட்டேன்!
மனம் புண்பட்டேன்!

நீ!பார்த்த பார்வையை-
நான் நினைத்தேன்-
அன்பென்று!

நீ!பார்த்ததோ-
நான் தூசிஎன்று!

பரவவில்லை!
உனக்கு பின் -
யார் மீதும்-
எனக்கு பாசம்-
வரவே  இல்லை!

ஏமாற்றம் எனக்கு -
ஒன்றும்
புதிதல்ல !

காசில்லாதவனை-
எவளுக்கும்ஏற்றுகொள்ள-
மனமில்லை!

ஏமாற்றம் நிறைந்த-
என் வாழ்வில் உன்னால் வரும் -
மாற்றம் என நினைத்தேன் -
மீண்டும் ஏமாற்றமே!

வாழ்கை எனும் புத்தகத்தில்
காதலென்பது ஒரு பக்கம்!
என்னமோ தெரியவில்லை -
அப்பக்கம் மட்டும் -
புரியவில்லை எனக்கும்!

வாகனம் ஓட்டுபவனின்
திறமை எதில் உள்ளதென்றால்-
எதிரில் வருபவனை அனுசரித்து-
ஓட்டுவதில்!

என் வாழ்கை பயணத்தில்-
உன் வாழ்க்கை வாகனம்-
குறுக்கிட வேண்டாம்!

ஏனென்றால் !
வாகன விபத்தில் -காயத்தின்
வலி ஆறும் வரைக்கும் !

வாழ்கை விபத்தின் -காயத்தின்
வலி தலை முறைக்கும்!

கொட்டாமலே..!

 தேள் -
கொட்டினால்தான்-
ஏறும்-
 விஷம்!

அழகே!

நீயோ!
இமை கொட்டாமல்-
பார்த்தாலும் -
விஷம் ஏறுவதுபோல்-
துடிக்குதடி-
தேகம்!

மது!

நாசமாக போக -
என்னை-
நாடலாம் -என்றது
'மது பான கடை'!