Friday, 8 March 2013

தீக்குளிப்பு!

வட்டியில-
வயிறு -
வளர்கிறவர்கள் கூட-
வாழுறாங்க!

கள்ள உறவு-
கல்சடைகளும்-
கலியுலகில்-
இருக்குறாங்க!

எல்லை -
விரிவுபடுத்தகூட -
"எழவுகளை" நடத்தி-
எகத்தாளமா-
இருக்கிறாங்க!

பச்ச பிள்ளைகளை-
பிச்சி எரிந்தவங்க கூட-
பந்தா காட்டுறாங்க!

நயவஞ்சக-
நம்பிக்கை துரோகிகள்கூட-
நல்லவனா-
நாடகமாடுறாங்க !

பார்வையாலேயே-
பலாத்காரம்-
பண்ணிக்கொண்டு-
புனித வேடமும்-
போடுறாங்க!

இன சுத்திகரிப்பு-
நடத்தி விட்டு-
இன்முகத்தோடு-
பேட்டியளிக்கிறாங்க!

இத்தனை -
ஜென்மங்களும்-
வாழயிலே!

"ஒற்றை கோரிக்கைக்காக"-
ஒற்ற உயிரை-
மாய்ப்பது-
உயர்ந்ததல்ல!

தீக்குளிப்பதால்-
தற்கொலை செய்வதால்-
நீதி கிடைக்குமா!?

அநியாயம்-
செய்தவனுக்குதான்-
தண்டனை கிட்டுமா!?

அநீதி இழைக்கப்பட்ட-
மக்களுக்காக-
குரல் கொடுப்பதில்-
தவறில்லை!

"ஒரே கூக்குரலில்"-
உயிர் இழப்பது-
சரி இல்லை!

உயிருள்ளவரை-
நீதிக்காக-
போராடுங்கள்!

உலகம்-
ஒருநாள்-
இல்லாவிட்டாலும்-
ஒரு நாள்-
செவி சாய்ப்பார்கள்!

உங்களது-
"குரலே அடங்கி"-
விட்டால்-
யார் அறிவார்கள்!?

திடீர் காளான்களாக-
"திடீர் மறைவு"-
வேண்டாம்!

மலைபோல்-
நிலைத்திருக்க-
நியாயவாதங்களை-
விதைத்திட-
வேண்டும்!

தீக்குளிப்பு!

இனி வேண்டாம்-
அந்நினைப்பு!

// சில கோரிக்கைகளுக்காக சில
பேர்கள் தீக்குளிப்பு செய்த செய்தி வாசித்தபோது மனதை நெருடிய வரிகள்//





Thursday, 7 March 2013

இருபாலரும்....!!

அடித்தளத்தை-
அலட்சியம்-
செய்து விட்டு-
அடுக்குமாடி-
கட்டுவது!

பசுவின்-
"மடியை"-
அறுத்துவிட்டு-
பசும்பால்-
விரும்புவது!

முதுகுத்தண்டை-
உடைத்து விட்டு-
நிமிர்ந்து நிற்க-
சொல்வது!

காடுகளை-
அழித்து விட்டு-
மழையை -
எதிர்பார்ப்பது !

மூக்கின் துவாரத்தை-
முழுவதும்-
அடைத்து விட்டு-
நறுமணத்தை-
நுகர சொல்வது!

ஒரே படகில்-
பயணித்து விட்டு-
"ஓரத்தை"-
ஒருவன் உடைப்பதை-
வேடிக்கை பார்ப்பது!

இவைகளெல்லாம்-
எப்படி-
மடத்தனமோ!?
மூடத்தனமோ!?

இதில் -
நீங்கள் -
சேர்த்துகொள்ளலாம்-
என்னென்னமோ!!

அதுபோலதான்-
ஆண் எனும்-
அகந்தையில்-
பெண்மையை-
அழிச்சாட்டியம்-
செய்வதும் !

பெண் சுதந்திரம்-எனும்
பெயரில்-
"போக்கழிந்து "-
போவதும்!

இரு பாலருக்கும்-
இரு வேறு-
தன்மைகள்-
உண்டு!

அத்தன்மைக்குள்-
இருந்துகொண்டால்-
சிறப்புண்டு!

முருங்கை மரம்-
கொஞ்ச வேகமான-
காற்றில்-
முறிந்து விடும்!

புளியமரம்-
நன்றாக-
வளைந்து -
கொடுக்கும்!

இரண்டும்-
மரவகைகள்தானே!?

ஆணும்-
பெண்ணும்-
இதுபோல்தானே...!?

//போக்கழிந்து-நாசமாக போவது//





Wednesday, 6 March 2013

சசி பெருமாள்...!!

அன்றைக்கு-
கஞ்சி தண்ணி-
இல்லையினாலும்-
கண்ணியமா-
வாழ்தாங்க!

இன்றைக்கு-
மாடியில-
வாழ்ந்தாலும்-
மானங்கெட்டு-
மதுவிலே-
மடியிறாங்க!

தாலி ஏற-
திருமண உதவி தொகை!

அதை-
"அறுக்கவா"-
தெருவெங்கும்-
டாஸ்மாக் கடை!?

அன்று-
குடிகாரனை-
எண்ணிடலாம்!

இன்று-
குடிக்காதவனை-
எண்ணிடலாம்!?

பூரண மது விலக்கு கோரி-
சசி பெருமாள்-எனும்
முதியவர்-
உண்ணாவிரதம்-
உள்ளார்!

எத்தனை பேர்-
நம்மில் அறிவார்!?

எவனோ-
எவளோ காதலிப்பது-
உண்மையா!?-என
கூவும் ஊடகமே!

இப்பெரியவரின்-
முப்பது நாட்கள்-
மேலாகியும் தொடரும்-
போராட்டத்திற்கு-
ஏன் மௌனமே!?

ஒரு படத்துக்கு-
எதிர்ப்பு-
தமிழ் நாடே-
கொதிப்பு!

"தண்ணியால-"
எத்தனை குடும்பம்-
நடுத்தெருவுல-
நிற்குது-
ஏன் வாயடைப்பு!?

வருமானம்-
வருதாம்!

குடியால-
போகுதடா-
மானம்!

அப்படிஎன்றால்-
அனைத்து-
"கொள்ளைகளையும்"-
அனுமதிப்போமா!?

அதில்-
பங்கு-(கமிசன்)
பெறுவோமா!?

அய்யா-
சசி பெருமாளே-
நீங்களும்-
நானும்-
எண்ணத்தால்-
ஒன்றுதான்!

இதனை-
புரியாதவர்கள்-
வாயில -
மண்ணுதான்!!

//முக நூல் (பேஷ் புக்) வாயிலாக சசி பெருமாள் அவர்களின் உண்ணாவிரதத்தை அறிந்தேன்-
இரண்டு நாட்கள் முன்பாகவே முப்பத்தி மூன்று நாட்களாகி விட்டதாக எழுதி இருந்தார்கள்.உங்களுக்கு மேலும் தகவல் தெரிந்தால் பின்னூட்டம்(கமெண்ட்) இடுங்கள்! அப்பெரியவருக்கும் மது ஒழிப்புக்கு போராடும்
மனித உரிமை ஆர்வலர்களுக்கும்.
இக்கவிதை அர்பணம்//







Monday, 4 March 2013

அழகாகிட....!!

முடிவை-
சொல்லுங்கள்-
உங்கள் -
மனதை தொட்டு!

யாரும் உள்ளார்களா!?-
நீங்காமல்-
உங்கள்-
மனதை விட்டு!?

அப்படி இருப்பவர்-
எப்படி உங்களை-
கவர்ந்தவர்!?

எப்படி-
உங்களுக்கு -
பிடித்தமானவர்-
ஆனவர்!?

நிறத்தை-
 வைத்தா!?

நடத்தையை-
வைத்தா!?

ஆம் -
முடிவு-
 இப்படியாகத்தான்-
இருக்கும்!

நடை முறை-
முதலிடம்!

"நிறமெல்லாம்-"
அடுத்த இடம்!

நிறத்தை-
மாற்றுவதாக-
விளம்பரம்!

இதில் நாம்-
ஏமாறுவதால் -
அவர்களுக்கு-
வியாபாரம்!

சொல்லில்-
மென்மை வையுங்கள்!

மனதை-
சுத்தம் -
செய்யுங்கள்!

உங்கள்-
அழகு மெருகேறும்-
அப்புறம்-
பாருங்கள்!!






Sunday, 3 March 2013

பேதையும்......!!??

படித்துள்ளேன்-
"கேட்டும் உள்ளேன்"-
கவிதை வரிகளில்!

போதைகள் தரும்-என
பேதை அழகில் -மயங்கியவர்களின்-
எழுத்துகளில்!

இன்றோ-
வேதனையே -
மிஞ்சுகிறது-
"போதையாக" அலையும்-
பெண்களையும்-
 காணுகையில்!

இதுதான்-
நாகரீகமா !?

இல்லை-
கேவலமா!?

கர்மம் என்றால்-
இவ்வுலகம்-
ஏற்குமா!?

ஆனால்-
குடிக்கும் ஆண்கள்-
குடும்பம் எனும்-
பூந்தோட்டதின்மேல்-
எரி திராவகம்(ஆசிட்)-
தெளிக்கிறார்கள்!

குடிக்கும் பெண்களோ-
பூச்செடிகளின்-
வேர்களில் -
ஊற்றுகிறார்கள்!

வீடுகளை-
நாசபடுத்தி விட்டு-
நாட்டின் -
"சாதனை விற்பனை"-
என்கிறார்கள்-
ஆள்பவர்கள்..!!!!


Saturday, 2 March 2013

யாசகம்...!

"கொடுக்கணுமே"-என
ஒதுங்கி செல்லும்-
பணக்காரன்!

கொடுக்க-
"ஒன்னும் இல்லையே"-என
கலங்கி செல்லும்-
"இல்லாதவன்"!

இவர்களின்-
உள்ளத்தின்-
"உதாசினதையும்"-
"உறுத்தலையும்"-
மனிதர்களின்-
அறிந்தவர்கள்-
யார்!?

உள்ளத்தின்-"
நிலை" அறிந்து-
கூலி கொடுக்க-
இறைவனன்றி -
வேறு யார்!?

Friday, 1 March 2013

பணிவு...!!

மனிதனுக்கு-
மனிதன்-
"பணிந்து" போவதில்-
தவறில்லை!


படைத்தவனை-
தவிர்த்து-
யாருக்கும்-
யாரும்-
"அடிபணிந்து"போக-
தேவை இல்லை!