சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
சாமரம் வீசுவதை விட்டு விட்டு
சிம்மாசனத்தின் மீது
ஆசைப்படு.!
வாழ்க்கை தரும்
மிச்சமென்ன.!?
அனுபவங்கள்தானே.!
விரலிடுக்குகளில் ஒழுகும்
நீரைப்போல
வாழ்நாளும் கசிகிறது .!
சோகமென்ன
சுகமென்ன
வாழ்வென்ன
தாழ்வென்ன
பிறப்பென்ன
இறப்பென்ன
இருளென்ன
ஒளியென்ன
மொழியென்ன
மௌனமென்ன
எல்லாவற்றிலும்
இறைவா நீயே.!
எனது
கண்ணீரையும்
கவலைகளையும்
சுமைகளையும்
பொறுப்புகளையும்
இறைவா.!
உன்னிடம் ஒப்படைக்கும்போதெல்லாம்
எனது சிறகுகளை விரிக்கிறேன்.!
உனது கருணையையன்றி
வேறெது
என்னை கரை சேர்க்க போகிறது.!?
வெறுமை நிறைந்த
உள்ளத்தில்
வசந்தத்தை நுழைவித்தாய்
எங்களிறைவா.!!