Monday 18 July 2011

திருமணம் ஆகி போனவளே...!

அதிகாலையில்-
 நீ வந்த பின் -
அணைந்து அணைந்து -கேலியாக-
எரிந்த -
தெரு விளக்கு!

உன் வருகையை-
 கண்டு விட-
அணையாமல் -
எரியுதடி!

மூச்சு திணறி-
 கெடக்குதடி-
உன் வீட்டு-
முற்றம்!

முத்தம் தரும் -
உன் உள்ளங்கால்-
சூடு -
கிடைக்காமல் !

'இடையில் "-
அப்போ அப்போ -
ஒட்டிய -
ஈய வாளியும்!

இனி இடம் -
கிடைப்பது -
எப்போ எப்போ -என
ஏங்குதடி!

கன்னி
 உனது -
கன்னி பேச்சை -
காணாமல்!

கதவெல்லாம் -
கண்ணீர் -
வடிக்குதடி!

'இத்து'போயி -
கிடக்குதடி-
உன்-
கிணத்து வாளி -
கயிறு!

சல்லடையாக -
போனதடி-
உன் வீட்டு-
சன்னல் -
கம்பி களும்!

ஆனந்த கண்ணீராய் -
இருந்த -
உன் வீட்டு-
கிணத்து தண்ணி !-
இப்போ-
அழுகையின் கண்ணீராய் -ஆனதடி!

சுற்று சுவரும் -
'சுதி'இழந்ததடி-
உன்-
சுந்தர முகம் -
காணாமல்!

வார்த்தை-
 சொல்ல முடியாதற்காக!

நான்-
எழுதி விட்டேன் -'வக்காலத்தாக'!!

4 comments:

  1. அன்பின் சீனை - பெண் புகுந்த வீட்டில் நன்கு வாழ காலம் பிடிக்கும் - கவலை வேண்டாம் - கலங்க வேண்டாம் - நல்லதே நடக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  3. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/11.html

    ReplyDelete