பொறந்த மண்ண விட்டு பொழக்கிறதுக்கு எவ்வளவு தூரம் போனாலும், அந்த மண்ணோட வாசமும்,நேசமும் நெஞ்சோட தான் நெறஞ்சி இருக்கும்.அது எப்பவாவது இல்லாம,எப்பவுமே ஆறுதலா(ய்)களைப்பு மாறுதலா(ய்) இருக்கும். சின்ன வயசுல இருந்து பாத்த மொகங்க ,மனசுக்குள்எ அப்ப அப்ப வந்து கிச்சி கிச்சி மூட்டும்,இல்லனா கடுப்ப கெழப்பும்,இல்லனா கண்ணீர வர வைக்கும்.
எனக்கு எப்பவுமே எளிமயா இருக்குறத ரொம்ப புடிக்கும்.அது எழுத்தா இருந்தாலும்,மனுசங்களா இருந்தாலும் சரி.ஒரு சிலர தேடி போயி பேச புடிக்கும்.அப்படிப்பட்டவுகளுக்கு தெரியாது,நாம அவுக மேல வச்சிருக்குற பாசம்.பாவம் நாம சொன்னாதானே அவுகளுக்கு தெரியும்.அப்படி நான் சின்ன புள்ளயில இருந்து பாத்த,ரசிச்ச மனுசர்தான் சுல்தான் மாமா.
இப்ப இவுகளுக்கு என்ன..!?எதுக்கு எழுதனும்னு கேட்கலாம்.மனசுல தோணலாம்.ஆனா இவுகள எழுதுனா என்ன..!,?னு சில மாசமா நெனப்பு வந்து கிட்டே இருக்கு.சரி மனசு பாரம் கொறய மாமாவ கொஞ்சம் எழுதலாம்னுதான் இத எழுதுறேன்.
சுல்தான் மாமாவுக்கு வயசு இப்ப அறுபதஞ்சிக்கு மேல இருக்கும்.அவுக சிறு வயசா இருக்கையிலேயே ,ஒப்பிலானுக்கு அவுக அத்தா கூட வந்தாங்களாம்.அப்படியே இங்கயே இன்னும் இருக்காக..
(தொடரும்....)
No comments:
Post a Comment