Monday, 27 June 2011

வெறுத்து விட்டேன்!

வெறுத்து விட்டேன்
பூக்களை!

என்னை மட்டும் -
வெறுத்து விட்டாள்-அந்த
"பூங்கொடி!"

Thursday, 23 June 2011

'''காலமாக ''' காத்திருக்கிறேன்!

ஆயுதங்கள் மிரட்டியது -
நாம் அஞ்சிடவில்லை !

வறுமை வாட்டியது -
நாம் வாடவும் இல்லை!


உறவுகள் உதறியது -நாம்
உடைந்திட வில்லை!

தேகத்தின் தேவை தீர்ந்த பின்னும் -நாம்
உறவை ''தீர்த்து ''கொள்ளவில்லை!

பிரியவே கூடாதென்று இருந்த -நாம்
பிரிந்தே இருக்கிறோமே!

மரணம் பிரிக்கவில்லையே!-
பிரித்தது நாம பெத்தபுள்ளைகளே!

சொத்தை பிரித்தார்கள் -
சொத்து சேர்த்து வைத்த -நம்மை ஏன்
பிரித்தார்கள் ''சொத்தை''கள்!

நாம ''சேர்ந்த ''தாலே -
பிறந்தவனுங்க !நம்மை
பிரிச்சி வச்சி டானுங்க!

உழச்ச சொத்தை
உருவுனானுங்க !
உன்னை விட்டு என்னை பிரிச்சி -
உசிரையுமே உருவிட்டானுங்க!

மூத்தவன் வீட்டில் -நானும்
இளையவன் வீட்டில் நீயும் !

பாக பிரி''வினை''போது -
பாசத்துக்கும் ''வினை''யாக -
அமைஞ்சது!

காதலுடன் -வாழ்தோம்
கவலையுடன் -வாழ்கிறோம்
''காலமான''பின்புதான் -சேர்வோமோ!

இப்படிக்கு,
முதுமையான முதியவர்.

நன்றி கடன்...!

 விரல் பிடித்து நடந்த -
கைகள்-
இன்று -
சுருக்கங்களால்!

ஓயாது நடந்த -
கால்கள்!-
இன்றோ!-
கிழிஞ்ச -
நார்களை போல்!

தளர்ந்த தாயே!
பாடு பட்டு-
 அடைச்சிடுவேன்-
பட்ட கடன் -
பணமா இருந்தா!?

எப்பாடு பட்டு -
அடைப்பேன்!-
என்தாயே!
பட்ட கடன் -
பாசமா இருந்தா!?

கருவின் வலியை-
அறிய-
எனக்கு -
வாய்ப்பில்லை!

காரணம் -
கர்ப்ப பை-
எனக்கில்லை!

என்ன புள்ள-
 பெத்தவளென!
என்ன வளர்ப்பு -
வளர்த்தவளென!
எத்தனையோ -
உனக்கு சொல்லடிகள்!

உச்சி முதல் -
உள்ளங்கால் வரை-
சொல்லடிகளை -
அடியா மாத்தி -
அடிச்சாலும்!

அடிகள் மிச்சமிருக்கும் -
உன் உடம்பில்-
 இடம் இருக்காது!

கடைசி காலத்தில் -
கஞ்சி ஊத்துரே -
பிள்ளைதானே-என்று-
கஷ்டமே தெரியாமல் -
வளர்த்தவளே!

உனக்கு -
கஞ்சி ஊத்த -
எந்த கஷ்டமும் -
நான் படுவேன்!

நன்றி செலுத்த-
 தெரியவில்லை-
ஒரு தாயின்-
 அன்புக்கு!

என்ன நன்றி -
செலுத்தி இருப்போம் -
எழுபது மடங்கு-
 அன்பு செலுத்தும் -
இறைவனுக்கு!?

கையடக்க தொலைபேசியே!

தொலை பேசியே !
உலகை அடக்கி கொண்டாய்-
உன்னுள்ளே!

பேசி பேசியே!
மனிதன் வாழ்வை -
முடக்கி விட்டாய் -
உனக்குள்ளே!!

கேட்காமலே!

அழுது பசியை-
  சொன்னால்தான் -
அன்னை கூட -
பாலூட்டுவாள்!
அவளே !-
போற்றுதலுக்கு உரியவள்!

கருதரிதவுடன் -
நெஞ்சில் பாலை சுரக்க -
வைத்தவனே!
கருணையாளன் ஆன -
வணக்கத்திற்கு உரிய -
இறைவன்!

(அ)சிங்கம்!

காக்கைக்கு தன்-
குஞ்சு பொன் குஞ்சு தானே!

அன்னையே !
அதனாலேயே !

வந்தவளுக்காக ஒதுக்கினேனே!
வளர்த்த உன்னையே!

அசிங்கம் என்னை -நீ
ஆண் சிங்கம் என -
'பீத்து'கின்றாயே!!

சிரிப்போ சிரிப்பு !

சிரித்துகொண்டோம் -
நாம் -
ஒருவரை ஒருவர் -
பார்த்து!

நீயோ!
சென்று விட்டாய் -
என்னை மறந்து -
 இன்னொருவனை மணந்து!

முடியவில்லை என்றாலும் -
முயற்சிக்கிறேன்!-
உன்னை-
மறந்து விட!-
புது  வாழ்வு
தொடங்கி விட!

மணந்திடவும் விடாது -
மறந்திடவும் விடாது -
நாம பொறந்த-
மண்!

காயங்கள் மாறலாம்-
காலபோக்கில் !

குத்தமே சொல்லி -
குதறுகிறார்கள் -
காயத்தை -
பேச்சு வாக்கில்!

காதலித்த போது -
வெறுத்த ஊரு!

பிரிந்தபோதும் -நம்மை பத்தி
சிரிப்பாய் சிரிக்குதடி-
அதே ஊரு!!