Wednesday 6 March 2013

சசி பெருமாள்...!!

அன்றைக்கு-
கஞ்சி தண்ணி-
இல்லையினாலும்-
கண்ணியமா-
வாழ்தாங்க!

இன்றைக்கு-
மாடியில-
வாழ்ந்தாலும்-
மானங்கெட்டு-
மதுவிலே-
மடியிறாங்க!

தாலி ஏற-
திருமண உதவி தொகை!

அதை-
"அறுக்கவா"-
தெருவெங்கும்-
டாஸ்மாக் கடை!?

அன்று-
குடிகாரனை-
எண்ணிடலாம்!

இன்று-
குடிக்காதவனை-
எண்ணிடலாம்!?

பூரண மது விலக்கு கோரி-
சசி பெருமாள்-எனும்
முதியவர்-
உண்ணாவிரதம்-
உள்ளார்!

எத்தனை பேர்-
நம்மில் அறிவார்!?

எவனோ-
எவளோ காதலிப்பது-
உண்மையா!?-என
கூவும் ஊடகமே!

இப்பெரியவரின்-
முப்பது நாட்கள்-
மேலாகியும் தொடரும்-
போராட்டத்திற்கு-
ஏன் மௌனமே!?

ஒரு படத்துக்கு-
எதிர்ப்பு-
தமிழ் நாடே-
கொதிப்பு!

"தண்ணியால-"
எத்தனை குடும்பம்-
நடுத்தெருவுல-
நிற்குது-
ஏன் வாயடைப்பு!?

வருமானம்-
வருதாம்!

குடியால-
போகுதடா-
மானம்!

அப்படிஎன்றால்-
அனைத்து-
"கொள்ளைகளையும்"-
அனுமதிப்போமா!?

அதில்-
பங்கு-(கமிசன்)
பெறுவோமா!?

அய்யா-
சசி பெருமாளே-
நீங்களும்-
நானும்-
எண்ணத்தால்-
ஒன்றுதான்!

இதனை-
புரியாதவர்கள்-
வாயில -
மண்ணுதான்!!

//முக நூல் (பேஷ் புக்) வாயிலாக சசி பெருமாள் அவர்களின் உண்ணாவிரதத்தை அறிந்தேன்-
இரண்டு நாட்கள் முன்பாகவே முப்பத்தி மூன்று நாட்களாகி விட்டதாக எழுதி இருந்தார்கள்.உங்களுக்கு மேலும் தகவல் தெரிந்தால் பின்னூட்டம்(கமெண்ட்) இடுங்கள்! அப்பெரியவருக்கும் மது ஒழிப்புக்கு போராடும்
மனித உரிமை ஆர்வலர்களுக்கும்.
இக்கவிதை அர்பணம்//







2 comments:

  1. இதையும் வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் :

    http://nadikavithai.blogspot.in/2013/03/33.html

    ReplyDelete
  2. சமூக அவலம் இது! நல்லதொரு காந்தியவாதியின் உண்ணாவிரதத்தை யாரும் ஆதரிக்கவில்லை! அரசும் கண்டுகொள்ள வில்லை! நானும் இதைப்பற்றி என் வலையில் பகிர்ந்துள்ளேன்! நன்றி!

    ReplyDelete