Friday 8 March 2013

தீக்குளிப்பு!

வட்டியில-
வயிறு -
வளர்கிறவர்கள் கூட-
வாழுறாங்க!

கள்ள உறவு-
கல்சடைகளும்-
கலியுலகில்-
இருக்குறாங்க!

எல்லை -
விரிவுபடுத்தகூட -
"எழவுகளை" நடத்தி-
எகத்தாளமா-
இருக்கிறாங்க!

பச்ச பிள்ளைகளை-
பிச்சி எரிந்தவங்க கூட-
பந்தா காட்டுறாங்க!

நயவஞ்சக-
நம்பிக்கை துரோகிகள்கூட-
நல்லவனா-
நாடகமாடுறாங்க !

பார்வையாலேயே-
பலாத்காரம்-
பண்ணிக்கொண்டு-
புனித வேடமும்-
போடுறாங்க!

இன சுத்திகரிப்பு-
நடத்தி விட்டு-
இன்முகத்தோடு-
பேட்டியளிக்கிறாங்க!

இத்தனை -
ஜென்மங்களும்-
வாழயிலே!

"ஒற்றை கோரிக்கைக்காக"-
ஒற்ற உயிரை-
மாய்ப்பது-
உயர்ந்ததல்ல!

தீக்குளிப்பதால்-
தற்கொலை செய்வதால்-
நீதி கிடைக்குமா!?

அநியாயம்-
செய்தவனுக்குதான்-
தண்டனை கிட்டுமா!?

அநீதி இழைக்கப்பட்ட-
மக்களுக்காக-
குரல் கொடுப்பதில்-
தவறில்லை!

"ஒரே கூக்குரலில்"-
உயிர் இழப்பது-
சரி இல்லை!

உயிருள்ளவரை-
நீதிக்காக-
போராடுங்கள்!

உலகம்-
ஒருநாள்-
இல்லாவிட்டாலும்-
ஒரு நாள்-
செவி சாய்ப்பார்கள்!

உங்களது-
"குரலே அடங்கி"-
விட்டால்-
யார் அறிவார்கள்!?

திடீர் காளான்களாக-
"திடீர் மறைவு"-
வேண்டாம்!

மலைபோல்-
நிலைத்திருக்க-
நியாயவாதங்களை-
விதைத்திட-
வேண்டும்!

தீக்குளிப்பு!

இனி வேண்டாம்-
அந்நினைப்பு!

// சில கோரிக்கைகளுக்காக சில
பேர்கள் தீக்குளிப்பு செய்த செய்தி வாசித்தபோது மனதை நெருடிய வரிகள்//





4 comments:

  1. அருமை...

    இந்தக் கோழைத்தனம் வேண்டாம்...

    ReplyDelete
  2. தீக்குளிப்பு - எதற்கு.... அது தேவையில்லாத ஒன்று.

    கவிதை மூலம் பகிர்ந்தது நன்று.

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,
    விடுலை வேள்விக்கு சரித்திரம் படைத்து தீக்குளிப்பில் உயிர் நீத்த தியாகிகள் எம் மக்களின் காவல் தெய்வங்கள் அவர்களுக்கென்று ஒவ்வொரு வருடமும் நினைவுநாளை எம் சமுகம் நினைவுகூறும் சும்மா இறந்தவனை கருமாரி முடிந்தவுடன் அவன் உறவே மறந்துவிடும் அப்படி இல்லை இலட்சியப் பாதையில் தீக்குளித்த தியாகிகள் எம் காவல் தெய்வங்கள்

    ஒருநாடு சுதந்திரம் அடைய பல இழப்புக்களை கொடுத்தே தீரவேண்டும் இரத்தம் சிந்தாமல் இலட்சியப்பதையை அடைய முடியாது,காரணம் இல்லாமல் தீக்குளிக்கவில்லை இலட்சியத்துக்காக தீக்குளித்தார்கள் இன்றும் அன்றும் அனையாத ஒளிச் சுடராக எம் மனதில் குடிகொண்டுள்ளார்கள்
    பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_14.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. roopan sako...!

      ungalathu vekam purikirathu....
      vethanai vilangikirathu....

      ennudaya nilai...
      poraatta vaayilaaka innum azhuththamaaka makkalidam
      ivvisayaththai serththida uyir vaazhalaame...

      iyarkaiyaakavo...
      vipaththo ....
      innum pala ethuvo...
      athu veru sakotharaa.....

      veroru kaaranam illai....

      Delete