Monday 1 December 2014

தென்றலே !நஞ்சாக மாறிப்போ.!


ஓ தென்றலே!

என்னைவிட்டு ஒதுங்கிப்போ!
முடிந்தால் நஞ்சாக மாறிப்போ!

ஈழத்து ரத்தத்தைப் பார்த்து பதறியவர்கள்!
குஜராத் ரத்தத்தை மறந்தார்கள்!

அங்கு அறுத்துயெறியப்பட்டதுதான் அநீதியா!?

இங்கு நடந்ததென்ன நீதியா!?

டெல்லி நிருபயாவிற்கு குலுங்கி நின்றது இத்தேசம்!

சுல்தானாவிற்கும்,வினோதினிக்கும்,புனிதாவிற்கும் நடந்தபோது சடலம்போல் சலனமற்றுக் கிடந்தது இதே தேசம்!

அங்கு நடந்தது பாலியல்வன்கொடுமை!
இங்கு நடந்ததென்ன பாசாங்குகொடுமையா!?

ஐந்து மீனவர்கள் மீண்டு வந்தபோது நான்,நீ என மார்தட்டுகிறார்கள்!

ஆறுநூறுக்கும் மேல் மீனவர்கள் செத்தழிந்து இருக்கிறார்கள்!

இதற்கு யார் காரணம் என சொல்வார்களா!?

இல்லை மக்களை ஏமாளிகளாக எண்ணுகிறார்களா!?

தனியாருக்கு தாரைவார்த்த காங்கிரஸை துப்புக் கெட்ட அரசு என்றவர்கள்!

தற்போது பாஜக வாரி வழங்குவதை வாய்மூடி பார்க்கிறார்கள்!

இந்நாட்டில் மனசாட்சி மடிந்து விட்டதா!?

இல்லை
மனசாட்சியில் மாசுப்படிந்து விட்டதா!?

எல்லைப் பாதுகாப்பிற்கு கோடிகணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது !

எல்லைக்குள்ளோ சாதியின்பேராலும்,மதத்தின் பேராலும் உயிர்கள் சூறையாடப்படுகிறது.!

எல்லையை மட்டும் பாதுகாத்தால் போதுமா?

எல்லைக்குள் பாதுகாப்பில்லாமல் இருப்பது தகுமா!?

ஓ தென்றலே!

ஆதலால்தான் சொல்கிறேன் !

மனிதம் மறந்த மனிதர்கள் வாழ்கிறார்கள் !

ஆதலினால் நஞ்சாக மாறிடு!


         

2 comments:

  1. அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையானவர்கள்!

    ReplyDelete
  2. மனச்சாட்சி என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை...

    ReplyDelete