நான் அந்தி என்கிறேன்
நீ மாலை என்கிறாய்
நான் பூ என்கிறேன்
நீ மலர் என்கிறாய்
நான் விடியல் என்கிறேன்
நீ அதிகாலை என்கிறாய்
நான் மணம் என்கிறேன்
நீ வாசம் என்கிறாய்
நான் “வந்தார்கள்” என்கிறேன்
நீ “வருகைப் புரிந்தார்கள்”என்கிறாய்
நான் சமுத்திரம் என்கிறேன்
நீ கடல் என்கிறாய்!
நாம் இருவரும் சொல்வது
ஒன்றுதான் என புரியாமல்
சண்டையிடும் நம்மைக் கண்டு
கைக்கொட்டி சிரிக்கிறது
துரோகங்களும் பகைமைகளும்!
எளிமை ஆனால் அருமை . உண்மை
ReplyDelete